Oviya: ரவுண்டு கட்டிய ஆண்கள்.. தீயாய் பரவும் ஓவியாவின் அடுத்த வீடியோ!
சென்னை: தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவருக்கு படத்தில் நடித்து பிரபலமானதைவிட, பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு, இணையத்தில் தனக்கு என்று ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கும் இவர், தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் களவாணி. இந்த திரைப்படத்தில், விமலுக்கு ஜோடியாக மகேஷ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நகைச்சுவை திரைப்படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, மத யானைகூட்டம், மன்மத அம்பு, முத்துக்கு முத்தாக, கலகலப்பு,மூடர் கூட்டம்,யாம் இருக்க பயமேன் என அடுத்தடுத்து படத்தில் நடித்து வந்தார்.

நடிகை ஓவியாவின் வீடியோ: ஓவியாவிற்கு திடீரென படவாய்ப்பு இல்லாத தால், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அம்மாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பேட்டியும் கொடுத்து இருந்தார்.அதே போல, அந்த வீட்டில் ஓவியா நேர்மையாக கலந்து கொண்டதால், அவருக்கு என்று ஆர்மி வைக்கும் அளவிற்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இதன் மூலம் அவருக்கு படவாய்ப்பு வரும் என்று நினைத்த ஓவியாவிற்கு எந்த படவாய்ப்பும் வரவில்லை. இருப்பினும் இன்ஸ்கிராமில் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், தற்போது, படப்பிடிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆண்கள் பலர் ரவுண்டு கட்டி நிற்க, ஒரே குத்தில் அனைவரையும் தெறித்து ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது.

என்ஜாய்: சில நாட்களுக்கு முன் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் ஓவியாவுக்கு ஆதரவாக அது அவர் இல்லை, மார்பிங் வீடியோ என்று கூறிவந்தனர். சிலர் ஓவியாவின் இன்ஸ்டாகிராமில், ஓவியா மேடம் வீடியோ ஒன்னு வந்திருக்கிறது, டைம் கம்மியாக இருக்குது... என்று கேட்க, இதற்கு, ஓவியா சளைக்காமல் என்ஜாய் என்று பதிலளித்து வியப்பை ஏற்படுத்தினார்.



Click it and Unblock the Notifications











