Oviya: இது தான் ஜிலேபி கொண்டையா? ஓவியாவை கிண்டலடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: களவாணி, மதயானை கூட்டம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஓவியா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேர்மையாக விளையாடி பலரின் மனதையும் வென்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ போன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை ஆராய்ச்சி செய்து பார்த்துவிட்டு, அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து அது ஓவியா தான் என்றனர். அதே போல, வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று ஓவியா மறுப்பு தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தில்லாக பதில் அளித்தார். அதேபோல, ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஓவியாவின் மேலாளர் புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

நடிகை ஓவியா: இதுகுறித்து பேசிய ஓவியா, வதந்தியை பார்த்து நான் எப்போதுமே பயப்பட்டது கிடையாது. அப்படி பயப்படும் ஆள் நான் இல்லை. மேலும், என்னைப்பார்த்து பலர், குடி பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக, கூறி கிண்டலடித்தார்கள். அப்படி என்றால் நான் சிறுவயதில் இருந்தே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக தான் இருந்தேன். இப்போது, குடி என்பது எனக்கு போர் அடித்துவிட்டது. நான் எந்த விஷயமாக இருந்தாலும், எக்ஸ்ட்ரீமாக போய் ஒரு கை பார்த்துவிட்டு அதில் இருந்து வெளியில் வந்துவிடுவேன் என்றார்.
ஜிலோபி கொண்டை: தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஓவியா ஹாலிவுட் நடிகை போல, வெள்ளை நிற உடையில், தனது அழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஓவியாவை வர்ணித்து கவிதை எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் கவுண்டமணி ஸ்டைலில் இது தான் ஜிலோபி கொண்டையா என கேட்டு வருகின்றனர். அந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











