எனக்கு கணவன் தேவையில்லை..கொச்சையாக கமெண்ட்.. போல்டாகா பதிலளித்த ஓவியா!

சென்னை : நடிகர் ஓவியா சமீபத்தில் தனது டுவிட்டரில் திடீரெனத் தோன்றி ரசிகர் ஒருவரின் கொச்சையான பதிலுக்கு அனைவரும் அசரும் வகையில் பதில் அளித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்களின் மூலமும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் உலகெங்கிலும் பிரபலமான நடிகை ஓவியா அனைவராலும் நேசிக்கப்படும் ஒருவராக இருந்து வருகிறார்.

நடிகர் ஆரவ் உடன் காதல் கிசுகிசுக்களில் அடிபட்டு வந்த ஓவியா தற்போது இருவரும் இணைந்து ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

பலரின் கவனத்தையும்

பலரின் கவனத்தையும்

திரைப்படத்துறையில் கங்காரு என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான ஓவியா தமிழில் நாளை நமதே மற்றும் இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி போன்ற திரைப்படங்களின் மூலம் அறிமுகமாகி தனது கொஞ்சும் நடிப்பின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இரு காதலர்களை

இரு காதலர்களை

முற்றிலும் கிராமத்து கதை களத்தைக் கொண்ட களவாணி திரைப்படத்தில் விமல் மற்றும் ஓவியா லீட் ரோலில் நடிக்க சரண்யா பொன்வண்ணன் மற்றும் இளவரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் இரு வேறு கிராமத்தில் வசிக்கும் இரு காதலர்களை மையமாகக் கொண்ட காமெடி திரைப்படமாக வெளியாகி அந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றியடைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

துணிச்சலான பேச்சு

துணிச்சலான பேச்சு

களவாணி திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மெரினா மற்றும் மூடர் கூடம், கலகலப்பு, மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே போன்று தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்த ஓவியா சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் மிகப்பிரபலமான ரியாலிட்டி ஷோவான உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு தமிழ் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களின் மனங்களையும் தனது துணிச்சலான பேச்சின் மூலம் பல கோடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

பல்வேறு சர்ச்சை

பல்வேறு சர்ச்சை

இவ்வாறு பல கோடி ரசிகர்களின் ஆதரவையும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்களின் பேராதரவை பெற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ஓவியா அதன் பிறகு பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90ml உள்ளிட்ட ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து இருந்தார்.

நண்பர்களாக பழகி

நண்பர்களாக பழகி

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் மற்றும் ஓவியா இருவருக்கு இடையே காதல் கிசுகிசு மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில் அந்த காதல் நிகழ்ச்சியிலேயே முறிந்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பின் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்பொழுது இருவரும் இணைந்து ராஜபீமா என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், ஓவியா எப்பொழுதும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வராதவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் தோன்றி "என்ன நடந்து கொண்டு இருக்கிறது" என ஒரே ஒரு ட்விட் மட்டும் தான் போட்டார். அந்த ட்விட் தான் தற்பொழுது வில்லங்கமாக மாறியுள்ளது.

இப்போதான் சுய இன்பம்

இப்போதான் சுய இன்பம்

இவர் போட்ட அந்த ட்விட்டுக்கு பலரும் பதிலளித்துள்ள நிலையில் ஒரு சிலர் பதிவிட்டுள்ள கொச்சையான பதிவிற்கும் ஓவியா அசராமல் பதில் அளித்துள்ளார். அதில் ஒருவர் "இப்போதான் சுய இன்பம் செய்து முடித்தேன்" என சொல்ல அதற்கு ஓவியா "அது உங்களுக்கு நல்லது தான்" என அசராமல் பதில் அளித்துள்ளார்.

எவ்வளவோ மேல்

எவ்வளவோ மேல்

மற்றொருவர் "உங்களைப் பொறுத்தவரையில் கல்யாணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழிப்பதற்கு சுய இன்பம் செய்வது எவ்வளவோ மேல், நான் சொல்வது சரிதானே" எனக் கேட்ட அந்த நபருக்கு "உண்மை தான் " என ஓவியா பதிலளித்துள்ளார்.

கணவன் தேவையில்லை

கணவன் தேவையில்லை

இன்னொரு நபர் "உங்களுடைய வருங்கால கணவரைப் பற்றி ஏதாவது எண்ணம் இருக்கிறதா??" என கேட்டதற்கு "எனக்கு கணவன் தேவையில்லை" என பளீர் பதிலளித்துள்ளார். இவ்வாறு எந்த வகையில் நெட்டிசன்கள் கேள்வி கேட்டாலும் தனது நேரடியான மற்றும் அசராத பதில்களை கூறிவரும் ஓவியா நிஜத்திலும் இப்படி போல்டாக இருக்கிறாரே என பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

அவர்களின் தோரணையிலேயே

அவர்களின் தோரணையிலேயே

எனினும் பல நடிகைகளும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேட்கும் தில கொச்சையான கேள்விகளுக்கு மறைத்து பதில் அளித்தும் சில சமயங்களில் பதில் அளிக்காமல் தவிர்த்தும் வரும் நிலையில் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி துணிச்சலுடன் பேசினாரோ அதேபோல் தற்போது ட்விட்டர் பக்கத்திலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் சிலர் கேட்ட கேள்விக்கு அவர்களின் தோரணையிலேயே பதிலளித்து வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X