ஏன் உயிரவாங்குறீங்க.. ரசிகரின் கேள்வியால் டென்ஷனான ஓவியா.. அப்படி என்ன கேள்வி கேட்டார் தெரியுமா?
சென்னை : இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, ரசிகர் ஒருவரின் கேள்வியால் மிகவும் டென்ஷனாகி கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஓவியா. அழகும், திறமையும் இருந்த போதும், சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தற்போது வரை நல்ல படவாய்ப்பைத் தேடி அலைந்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஓவியாவை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

நடிகை ஓவியா
நடிகை ஓவியா என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில், குட்டி குட்டி டவுசர் போட்டுக்கொண்டு காலையில் போடும் பாட்டுக்கு நடனமாடி அசத்தினார். அது மட்டும், கேமராவைப் பார்த்து ஸ்ப்ரே அடிச்சிடுவேன் என்று அவர் பேசிய வசனம் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது.

களவாணி படத்தில்
மலையாளத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான கங்காரு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஓவியா நாளை நமதே படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். களவாணி படத்தில் விமலுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்தார். இந்த படமும், மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
இதன் பிறகே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் பாதியில் வெளியேறினாலும், இவருக்கு என்று தனி ஆர்மி உருவானது. சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின், 90ml , காஞ்சனா 3 படத்தில் நடித்தார். இந்த படங்களும் தோல்விப்படங்களாக அமைந்தன.

ஏன் உயிரவாங்குறீங்க
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு வயது ஆகிக்கொண்டே போகிறது. எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டுள்ளார். ரசிகரின் இந்த கேள்வியால் கடுப்பான ஓவியா, எப்போதும் இதே கேள்வியைத் தான் கேட்பீங்களா என்றும், எனக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவே இல்லை. இந்த மாதிரி கேள்வியை என்னிடம் கேட்டு உயிரை வாங்குறீங்க என சற்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











