ஓவியாவின் திடீர் 'லவ் டிவிட்'.. அவங்களையா சொல்றீங்க.. குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: ஓவியாவின் திடீர் காதல் டிவிட்டை பார்த்த ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Recommended Video

Royal Calendar Photoshoot 2020 by karthik srinivasan | Simbhu | Oviya

மலையாள நடிகையான ஓவியா, தமிழில் களவானி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஓவியா.

தமிழ் மட்டுமின்றி தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார் ஓவியா.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை ஓவியா. இதில் நேர்மையாக இருந்ததால் ரசிகர்களுக்கு பிடித்தமானவர் ஆனார் ஓவியா. ஓவியாவுக்கு என சமூக வலைதளங்களில் தனி ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு வரவேற்பை பெற்றார்.

தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

அப்போது சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் கொண்டார். ஆனால் ஆரவ், அவரது காதலை ஏற்கவில்லை. மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்த பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் அவரை கார்னர் செய்தனர். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான ஓவியா, அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

நல்ல நண்பர்கள்

நல்ல நண்பர்கள்

இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஓவியா. ஆனாலும் அவரை மீண்டும் கொண்டு வரக்கோரி ரசிகர்கள் போராட்டம் நடத்தாத குறையாக கோரிக்கை விடுத்து வந்தனர். பிக்பாஸ் வீட்டில் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்காவிட்டாலும் வெளியே வந்த பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

விலகிபோவதில்லை

விலகிபோவதில்லை

இருவரும் வெளிநாடுகளில் சுற்றிய போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை ஓவியா, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்மைவிட்டு விலகிப்போவதில்லை! அவர்கள் நம் அருகில் நடக்கிறார்கள். பார்த்திருக்கமாட்டோம், கேட்டிருக்கமாட்டோம். ஆனால், எப்போதும் அருகில்தான் இருப்பார்கள்., அதிகம் நேசித்தவர்கள், தவறவிட்டவர்கள், ஆனால் எப்போதும் மிகவும் அன்பானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அம்மாவைப் பற்றி?

அம்மாவைப் பற்றி?

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த டிவிட் யாருக்கானது ஓவியா என நேரடியாகவே கேட்டுள்ளனர். அதே நேரத்தில் சிலர், நீங்கள் சொல்வது உண்மைதான்.. ஆனால் அது நம் பெற்றோருக்கு தான் பொருந்தும் என தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் உங்களின் அம்மாவை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அவர் எப்போதும் உங்களுடனே இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X