Oviya: தேக சுகத்தில் கவனம்.. வின்டேஜ் மோடுக்கு போன ஓவியாவின் புது வீடியோ.. ரசிகர்கள் ஜொள்ளு!

சென்னை: நடிகை ஓவியா படத்தில் நடித்தாலும் நடிக்கவில்லை என்றாலும் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு தனி வரவேற்பு உள்ளது. இவரது துணிச்சல் மற்றும் வெளிப்படையான பேச்சு நடிப்பைக் கடந்து ரசிகர்கள் இவரை நேசிக்க காரணமாக உள்ளன. இப்படி இருக்கும்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஓவியா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், அவருக்கு தமிழ்நாட்டில்தான் ரசிகர்கள் பட்டாளம் ரொம்பவும் அதிகம். மலையாளத்தில் கங்காரு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு தனது தொடக்க காலத்தில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் என்றால் அது, தமிழில் அவர் களமிறங்கிய களவாணி படம் தான். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் தமிழில் அடுத்தடுத்து கமிட் ஆனார்.

Actress Oviya Shares Her Recent Reels Video in Vintage Look Goes Trending
Photo Credit:

இது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு, 'ஓவியா ஆர்மி' என்ற ரசிகர்கள் பட்டாளமே உருவானது. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த சீசனில் கலந்து கொண்ட பலரும் தொடக்கத்தில் கேமரா இருக்கிறது, கவனமாக இருக்க வேண்டும், என்ற மனநிலையிலேயே இருந்து பல தவறுகளைச் செய்தார்கள். அவற்றையெல்லாம் தட்டிக் கேட்டு, முதல் சீசன் பிக் பாஸ் வீட்டின் ராணியாக வலம் வந்தார் ஓவியா.

தனிப்பட்ட வீடியோ: பிக் பாஸ்க்குப் பின்னர் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில தவறான படங்களில் கமிட் ஆகி, கிட்டத்தட்ட பீல்ட் அவுட் ஆனார். சில மாதங்களுக்கு முன்னர், இணையத்தில் பரவிய ஒரு தனிப்பட்ட வீடியோ ஒன்றில் இருக்கும் பெண் ஓவியா தான் என பலரும் கூறினார்கள். இது தொடர்பான தகவல்கள் மொத்த இணையத்தையும் ஆக்கிரமித்தது. அதையடுத்து இவர் பகிர்ந்த புகைப்படத்துக்கு இணைய வாசி ஒருவர், வீடியோ மிகவும் குறைவான நேரத்தில் உள்ளது.அதிக நேரம் உள்ள வீடியோவை பகிரவும் எனக் கேட்டதற்கு, அடுத்த முறை பகிர்கிறேன் என பதில் அளித்து ஆச்சரிய மூட்டினார்.

Actress Oviya Shares Her Recent Reels Video in Vintage Look Goes Trending
Photo Credit:

வின்டேஜ் மோட்: இந்நிலையில் தற்போது ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. அதாவது அந்த வீடியோவில் வின்டேஜ் கதாநாயகிகள் போல உடை அணிந்து கொண்டு, தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார். அதாவது, 1979 ஆம் ஆண்டு வெளியான பகலில் ஓர் இரவு படத்தில் இடம் பெற்ற இளமை எனும் பூங்காற்று பாடலுக்கு நடனமாடி வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் செம அழகாக இருக்கிறார் ஓவியா. இதனால் ரசிகர்கள் மாறி மாறி ஜொள்ளு விட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X