Oviya: இருட்டு அறையில் முரட்டு குத்து இதுதானா? ஓவியாவின் கருப்பு, வெள்ளை போட்டோஸ்!

சென்னை: நடிகை ஓவியா, தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் பலர் லைக்குகள் மற்றும் கமெண்டுகளை குவித்து வரவேற்றனர்

களவாணி திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை தொட்ட ஓவியா, மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இவருக்கு திடீரென தமிழில் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து மலையாளம், தெலுக்கு பக்கம் சென்றார்.

Oviya photos

நடிகை ஓவியா: அங்கும் படங்கள் சரியாக அமையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில்,வீட்டில் உள்ளவர்களிடம் பிரச்சனை ஏற்பட்ட போதும் நேர்மையாக விளையாடி அனைத்து ரசிகர்களின் மனதை வென்றார். ஓவியா தான் டைட்டிலை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சி பின் இவருக்கு சினிமாவில் பெயர் எடுக்கும் அளவிற்கு வாய்ப்பு வரவில்லை என்றாலும் சமூகவலைதளத்தில் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால், அவர்களை ஓவியா எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்து இருக்கிறார்.

தைரியமான பெண்: கடந்த ஆண்டு, நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ போன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து அது ஓவியா தான் என இணையத்தில் செய்தி பரவியது. இதற்கு பதிலளித்த ஓவியா, அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று மறுத்ததோடு மட்டுமில்லாமல் இதுகுறித்து புகாரும் கொடுத்ததார். நான் வதந்தியை நினைத்து பயப்படுவது கிடையாது. நான் எதையும் எதிர்கொள்ள தயராகத்தான் இருக்கிறேன். இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் நான் கிடையாது என தைரியமாக பேசினார்.

Oviya photos

ஸ்டைலிஷ் லுக்: இந்நிலையில், ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு வெள்ளை போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் சல்லடை போல் இருக்கும் உடையில், ஒரு காலை மட்டும் நீட்டி வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் கருத்துக்களை பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த போட்டோவை அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X