அந்த வீடியோவில் இருப்பது யார்?.. ஓவியா சொன்ன செம பதில்.. இந்தப் பிரச்னைக்கு இப்போ முடிவு வராதோ?
சென்னை: கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய தலைப்பு செய்தியாக இருப்பது ஓவியா. அவரது வீடியோ என சொல்லி ஒன்று பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து அதற்கு அவர் மறுப்பு தெரிவிப்பார் என்று பார்த்தால்; அதுகுறித்து கேட்பவர்களுக்கு அதிரடியாக பதிலளித்துவருகிறார். இதனால் பலரும் அந்த வீடியோவில் இருப்பது ஓவியாதான் என்று உறுதியாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஓவியா அளித்த பதில் உச்சக்கட்ட ட்ரெண்டாகியுள்ளது.
களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா தமிழில் பிஸியான நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடி சில படங்களின் வாய்ப்புகள் அவருக்கு தொடர்ச்சியாக கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் அப்படி அவர் நடித்த படங்களிலேயே கலகலப்பு, மதயானை கூட்டம் ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தன. அந்த இரண்டு படங்களிலுமே ஓவியாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் படங்களில் நடித்தாலும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

பிக்பாஸ் ஓவியா: சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டார் ஓவியா. தனது வெளிப்படையான பேச்சு, வெகுளித்தனமான செயல்பாடுகள் என ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். பிக்பாஸ் வீட்டில் ஆரவ்வுக்கும் ஓவியாவுக்கும் கெமிஸ்ட்ரி உண்டானது. எனவே இரண்டு பேரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஓவியாவுக்கென்று ரசிகர்கள் பெருக ஆரம்பித்ததும் ஓவியா ஆர்மியெல்லாம் ஆரம்பிக்கப்பட்டது.
திருமணத்தில் நோ ஆர்வம்: பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு மீண்டும் செம பிஸியாக நடிக்க ஆரம்பிக்கலாம் என்று எண்ணியிருந்தார் ஓவியா. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. சில படங்களில் மட்டுமே நடித்தார். அதனைத் தொடர்ந்து யூட்யூப் சேனல்களுக்கு கொடுத்த பேட்டிகளில் வெளிப்படையாக பேசி பரவலாக அறியப்பட்டார். இதுவரை திருமணம் செய்துகொள்ளாத அவருக்கு அதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை என்றும் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரவிய வீடியோ: இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தரங்க வீடியோ ஒன்று வெளியானது. அதில் இருப்பது ஓவியாதான் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள். ஒருசிலரோ இல்லை அது ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது என்று சொன்னார்கள். வேறு சிலரோ கண்டிப்பாக ஓவியாதான் கையில் இருக்கும் டாட்டூவே அதனை உறுதி செய்துவிட்டதாக பேசுகிறார்கள். இப்படி சமீபமாக ஹெட் லைன்ஸாக மாறியிருக்கிறார் நடிகை ஓவியா. அந்த வீடியோவில் இருப்பது தான்தான் என்றோ இல்லை என்றோ இதுவரை அவர் சொல்லவுமில்லை.
தக் ரிப்ளை: இந்த விஷயத்தை ஓவியா படு ஸ்மார்ட்டாகவும், கூலாகவும் ஹேண்டில் செய்துவருகிறார். வீடியோ பரவிய அன்றே அவரிடம் நெட்டிசன் ஒருவர், 17 நொடிகளில் ஒரு வீடியோ வந்திருக்கிறது நேரம் பத்தவில்லை என்று கூற; அடுத்த முறை நீளமாக எடுக்கிறேன் என்று பதிலடி தந்தார். அதேபோல் இன்னொருவர், உங்களது வீடியோ ஒன்று வந்திருக்கிறே என்று நக்கல் செய்ய; என்ஜாய் என்று கூறி தக் லைஃப் கொடுத்தார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் அந்த வீடியோவில் உங்களுடன் இருப்பது யார் ஓவியா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு எந்தவித கோபமோ, பதற்றமோ அடையாத ஓவியா, அது மர்மமாகவே இருக்கட்டும் என்று நச் ரிப்ளை செய்தார். இதனை கவனித்த ரசிகர்கள் ஓவியா வேற மாதிரி இதை ஹேண்டில் செய்றாங்களே என்று ஆதரவு கொடுத்துவருகிறார்கள். இதற்கிடையே அந்த வீடியோ தொடர்பாக ஓவியா கேரள சைபர் க்ரைமிடம் புகார் ஒன்றை கொடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் வந்திருப்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications