மலையாள நடிகர்களுக்கு முதுகெலும்பு கிடையாது.. நடிகை பத்மபிரியா அதிரடி கருத்து!

திருவனந்தபுரம்: கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை கேரளாவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பல்வேறு நடிகைகளும் தங்களது கருத்துக்களையும் கண்டனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு மொழி படங்களிலும் இத்தகைய பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முன்னாள் நடிகைகள், தற்போதைய நடிகைகள் என அனைவரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தங்களது சொந்த அனுபவங்கள் மற்றும் தாங்கள் பார்த்த சம்பவங்களை அடுத்தடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

padmapriya hema committee report

ஹேமா கமிட்டி அறிக்கை: மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. முன்னதாக நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு பதிவு மேற்கொள்ளப்பட்ட நிலையில் நடிகர் நிவின் பாலியும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் இது முற்றிலும் பொய் என்றும் தான் இதை சட்டபூர்வமாக அணுகவுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து ராதிகா, குஷ்பூ, ரஞ்சனி உள்ளிட்ட பல நடிகைகளும் ஹேமா கமிட்டி விவகாரத்தில் அடுத்தடுத்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை பத்மபிரியா: அந்த வகையில் தற்போது நடிகை பத்ம பிரியாவும் மலையாள நடிகர்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். மலையாள திரைப்பட சங்கத்தில் உள்ள நடிகர்கள் யாருக்கும் முதுகெலும்பு கிடையாது என்று அவர் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லாலின் கருத்துக்கள் ஏமாற்றத்தை அளிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்த அறிக்கையை யாருக்காக வெளியிடாமல் இருந்தார்கள் என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் பவர் குரூப் இருப்பதுதான் உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்

மலையாளத்தில் பவர் குரூப்: அதிகாரம் இருப்பதால்தான் அவகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் பத்மபிரியா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தனக்கு மலையாளத்தில் திடீரென வாய்ப்புகள் குறைந்ததற்கான காரணம் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தமிழிலும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளதாக பல நடிகைகளும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனாலும் தமிழுடன் கம்பேர் செய்யும் போது மலையாள திரை உலகில் இது மிகவும் அதிகம் என்றும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பத்மபிரியா குற்றச்சாட்டு: இதனிடையே நடிகை பத்மபிரியாவின் இந்த குற்றச்சாட்டும் மிகப்பெரிய கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பத்மப்ரியா. தமிழில் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மிருகம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மலையாளத்திலும் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X