46 வயசானா என்ன? நச்சிந்தி மச்சானே வைபில் பத்மப்ரியாவை கொண்டாடும் ஃபேன்ஸ்.. அதிரடி போட்டோஷூட்!
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியத் திரையுலகில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பத்மபிரியா. தமிழில் இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் மற்றும் இயக்குனர் ராமின் தங்கமீன்கள் போன்ற எக்காலமும் அழியாத காவியங்களில் எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களை உருக வைத்தவர்.
தமிழில் இவருக்குப் பெரிய வரவேற்பு இருந்தாலும், இங்கே மிகக் குறைவான படங்களில் மட்டுமே நடித்தார். 'பிரம்மம்' படத்திற்குப் பிறகு தமிழில் பெரிதாகத் தலைகாட்டாத பத்மபிரியா, மலையாளம், தெலுங்கு மற்றும் 2022-ல் வெளியான 'ஒண்டர் வுமன்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்திருந்தார். கடந்த ஆண்டு பெங்காலி படம் ஒன்றிலும் கேமியோ ரோலில் வந்து சென்றார்.

இன்ஸ்டா க்ளிக்ஸ்: தற்போது படவாய்ப்புகள் எதுவும் பெரிதாக இல்லாத சூழலில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக மாறி ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்து வருகிறார் பதமபிரியா. அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒரு பழங்காலத்து அரண்மனைப் பின்னணியில், தேவதை போல பளிச்சிடும் வெள்ளை நிற மாடர்ன் உடையில் செம ஸ்டைலிஷான ஷூஸ் அணிந்து, காற்றில் பறந்தபடி அவர் கொடுத்துள்ள போஸ்கள் வேற லெவலில் ரசிக்க வைக்கின்றன. உடலின் கட்டமைப்பு மற்றும் கிளாமர் குறையாமல், அழகாக அவர் ஆடியுள்ள நடன போஸ்கள் இளசுகளின் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

நச்சிந்தி மச்சானே: பத்மபிரியாவிற்கு தற்போது 46 வயது ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். அந்த அளவிற்கு செம ஃபிட்டாகவும் இளமையாகவும் அவர் இருக்கிறார். இதனைப் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள், சமீபத்தில் விஷால் நடித்துக்கொண்டு இருக்கும் 'மகுடம்' படத்தின் ஃபோக் பாடலான "நச்சிந்தி மச்சானே" (அதாவது எங்களுக்கு உங்களைப் பிடிச்சிருக்கு மச்சானே) என்ற பாடல் வரியைக் குறிப்பிட்டு, சோசியல் மீடியாவில் இந்த புகைப்படங்களை செம வைபாகக் கொண்டாடி கமெண்டுகளை தட்டிவிட்டு வருகின்றனர். வயதானாலும் உங்கள் அந்த ராயல் லுக் இன்னும் குறையவில்லை என கமெண்ஸ்களை பதிவிட்டு கமெண்ஸ் பாக்ஸை நிரப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications