வெற்றியை தொட முடியாத பத்மினியின் மகன்.. இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?
சென்னை: தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்திருந்த நடிகை பத்மினி, தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். பத்மினியின் ஒரே மகன் பிரேம் ஆனந்தின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த பத்மினி, தமிழ் சினிமாவில் நாட்டிய பேரொளியாக திகழ்ந்தார். பத்மினியுடன் அவரது சகோதரிகளான ராகினி, லலிதா ஆகியோரும் நடனத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்த போதும் பத்மினி மட்டுமே சினிமாவில் கொடிகட்டி பறந்தார். இவர், தமிழ் படம் மட்டுமில்லாமல்,, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ரஷ்யா போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

நாட்டிய பேரொளி பத்மினி: இந்தி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த இவர், சிவாஜியுடன் சேர்ந்து வாழ்க்கை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படமே நடிகர் திலகம் சிவாஜியுடன் தான். அதனால் தான் என்னவோ சிவாஜி மீது அளவில்லா அன்புவைத்திருந்தார் பத்மினி. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜியுடன் மட்டும் ஜோடியாக நடித்திருந்தார் பத்மினி. அதனாலேயே திரையில் சிவாஜி - பத்மினி ஜோடியை ரசிகர்கள் மிகவும் விரும்பினார்கள். அதிலும் குறிப்பாக தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் போன்ற படங்களில் இவர்களின் ஜோடியை திரையில் கொண்டாடினார்கள்.
திறமையான நடிகை: வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடல் பத்மினியின் நடனத்தைப் பார்த்து உச்சுகொட்டாதவர்களே இருக்க முடியாது. குச்சிபுடி, மோகினி ஆட்டத்தில் திறமையானவராக இருந்த பத்மினியை செல்லமாக நாட்டிய பேரொளி பட்டப்பெயரை வைத்து அழைத்து வந்தனர். இவர் தன்னுடைய நடிப்பு திறமைக்கும் நாட்டிய திறமைக்கும் வாங்காத விருதுகளே இல்லை.

அமெரிக்காவில் நடனப்பள்ளி: படங்களில் படுபிஸியாக நடித்துக்கொண்டிருந்த பத்மினி, மருத்துவர் ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டு, அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவை விட்டு விலகியே இருந்த இவர், தனது மகன் பிரேம் ஆனந்தை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். இதையடுத்து, அமெரிக்காவில் நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி முறைபடியாக பரதநாட்டிய கலையை கற்றுக்கொண்டுத்துக்கொண்டு இருந்தார்.
பத்மினியின் மகன்: இதையடுத்து, 2006ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது ஒரே ஒரு மகன் பிரேம் ஆனந்த், 1986ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த Udayam Padinjaru என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. தன்னுடைய தாய் போல சினிமாவில் கொடி கட்டி பறப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், பிரேம் ஆனந்த் முதல் படத்திலேயே இருந்த இடம் தெரியாமல் போனார். தற்போது இவர், உலகப் புகழ்பெற்ற டைம் ஆங்கில பத்திரிக்கையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











