பார்வதி நாயர் கொடுத்த முத்தம்.. இது காதலை பரப்பும் !

சென்னை : நடிகை பார்வதி நாயர் கொரன்டைன் நேரத்தை தன் செல்ல பிராணியான நாயுடனும் செலவிட்டு வருகிறார்.

Recommended Video

Shabbo chit chat with fans | Sembaruthi| Lock Down Diaries

பல நடிகைகள் விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்து வரும் நேரத்தில், பார்வதி நாயர் தன் செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தை அதிகபடியாக பகிர்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் பகிர்ந்த பெரும்பாலுமான புகைப்படங்களில் அவர் நாயுடன் தான் இருக்கிறார்.

Actress Parvathi Nair shared a photo of the dog kissing

இதே போல்,தன் நாய்க்கு முத்தம் கொடுப்பதை போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் இந்த புகைப்படம் மிக பெரிய அளவில் வைரலாகி வருகிறது . இந்த புகைப்படத்தை பதிவேற்றி விட்டு, இது ஜீவனுக்கு கொடுக்கும் முத்தம் இந்த கடுமையான நேரத்தில் காதலை பரப்பும் என்று கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் இருந்து நாட்களை நகர்த்துவதே கடுமையானது. இந்த கடுமையான நிலையில் மிக மகிழ்ச்சியான முறையில் பார்வதி தனது நாயுடன் செலவிட்டு வருகிறார் என்பதை பகிர்ந்து இருக்கிறார்.

Actress Parvathi Nair shared a photo of the dog kissing

பார்வதி எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். தற்போது வீட்டில் இருக்கும் சமயத்தில் முன்பை விட அதிகமாக சமூக வலைத்தலங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்த நேரத்தில் தன்னால் கவர்ச்சி நிரைந்த புது புகைப்படங்களை எடுத்து பதிவேற்ற முடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு தனது பழைய புகைப்படங்களையாவது பதிவேற்றி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார்.

இதை தாண்டி பார்வதி தான் என்னவெல்லாம் செய்கிறேன் என்பதை அதிகமாக ஸ்டோரியாக பதிவிட்டு வருகிறார். இதிலும் அவருடன் பெரும்பாலும் இடம் பெறுவது அவரது செல்லபிராணி தான் .

Actress Parvathi Nair shared a photo of the dog kissing

இவர் தன் நாயுடன் அதிக புகைப்படங்களை பதிவிடுவதால் ரசிகர்களும் இந்த புகைப்படங்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கான அன்பை காட்டி வருகின்றனர். இதே நேரத்தில் தான் தன் செல்லபிராணியுடன் எடுக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்துள்ளார். அந்த பக்கத்திற்கு தனது நாயின் பெயரான ஸ்டார் என்ற பெயருடன் ஸ்டார் தி சாம்ப் என்று வைத்துள்ளார் .

இந்த நேரத்தில் பெரும்பாலும் செல்லபிராணிகள் வள்ர்ப்பவர்களுக்கு அவர்கள் வளர்க்கும் செல்லபிராணிகளுடன் நேரத்தை செலவிட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் பார்வதியை போல பல நாயகிகளும் தற்சமயத்தில் தங்களின் செல்லபிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு அதை பதிவுகளாக பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X