ரோஸு ரோஸு ரோஸு அழகான ரோஸு நீ.. புடவையில் மினுக்கும் பார்வதி நாயர்!

கொச்சி : மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் நடிகை பார்வதி நாயர் இப்போது ரோஸ் கலர் புடவையில் அம்சமாக இருக்கும் புகைப்படத்தை கவர்ச்சிப் பொங்க வெளியிட்டுள்ளார்.

அஜித் நடித்த என்னை அறிந்தால் உள்ளிட்ட பல பிரபலமான தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பரிச்சயமாக உள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதி நாயர் வெளியிட்டுள்ள ரோஸ் கலர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து புகழ்ந்து பாடி வருகின்றனர்.

இரு மொழிகளிலும்

இரு மொழிகளிலும்

இந்தியில் வெளியாகும் பல திரைப்படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒரு சில படங்கள் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டு வருகின்றன.

நடிகர் ஜீவாவும்

நடிகர் ஜீவாவும்

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் 83 திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி உள்ளது. இதில் நடிகை பார்வதி நாயர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் நடிகர் ஜீவாவும் இதில் நடித்துள்ளார்.

குத்தாட்டமும் போட்டிருப்பார்

குத்தாட்டமும் போட்டிருப்பார்

அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் மலையாளத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த பார்வதி நாயர் முதன்முறையாக தமிழில் அறிமுகமானதைத் தொடர்ந்து அதில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்ததோடு அதாரு அதாரு பாடலில் குத்தாட்டமும் போட்டிருப்பார்.

பல லட்சம் பாலோவர்ஸ்கள்

பல லட்சம் பாலோவர்ஸ்கள்

தமிழில் வெளியான பிரபலமான பல திரைப்படங்களில் அஜித், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த நடிகை பார்வதி நாயர் சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு பல லட்சம் பாலோவர்ஸ்களை ரசிகர்களாக கொண்டுள்ளார்.

சந்தானம் பாணியில் வர்ணித்து

சந்தானம் பாணியில் வர்ணித்து

இவ்வாறு பார்வதி நாயர் பதிவிடும் பதிவுக்காகவே கால் கடுக்க காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் பல அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சியில் நனைய வைத்து வரும் பார்வதி நாயர் இப்பொழுது ரோஸ் கலர் புடவையில் அம்சமாக நின்றுகொண்டு சிறுத்த இடையில் சங்கிலியால் கட்டியது போல ஒட்டியாணத்தை போட்டுக்கொண்டு சுண்டி இழுக்கும் பார்வையால் புத்தம்புது ரோஜாவை போல இருக்கும் பார்வதியின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரோஸு ரோஸு ரோஸு அழகான ரோஸு நீ ! பீசு பீசு பீசு எனக்கேத்த பீசு நீ என சந்தானம் பாணியில் வர்ணித்து புகழ்ந்து பாடி கண் இமைக்காமல் பார்த்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X