எனது செல்ல நாய் கூப்பருக்கான அன்பு சிறப்பானது.. பார்வதி நாயர்
சென்னை: செல்லப்பிராணிகளிடம் பிரியம் கொண்ட பார்வதி நாயர், தனது நாயை கொஞ்சும் போட்டோவை பதிவேற்றி இருக்கிறார்.
என்னை அறிந்தால் படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகையாக அறிமுகமானவர் பார்வதி. இவர் மலையாள திரையுலகை அடிப்படையாய் கொண்டு நடிக்க ஆரம்பித்தவர். பார்வதி தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமாகிய பின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் .

பார்வதி தமிழ் ,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் பார்த்திபன் இயக்கத்தில் உருவான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில், அவர் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்திற்கு அவருக்கு ரைசிங் ஸ்டார் என்ற தலைப்பின் கீழ் எடிசன் விருதுகள் வழங்கபட்டது .
தற்போது ட்விட்டரில் தனது அழகிய புகைப்படங்களை சீரான இடைவெளியில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வரும் பார்வதி, ட்விட்டரில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை வைத்து இருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பயன்பாட்டாளர்கள் அதிகம் அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் தான் நடிகைகள் அதிகம் கவர்ச்சி மிகுந்த போட்டோசூட்களையும் புகைப்படங்களையும் பதிவேற்றுகின்றனர் .
தற்போது ட்விட்டரில் தனது அழகிய புகைப்படங்களை சீரான இடைவெளியில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வரும் பார்வதி . ட்விட்டரில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பாளர்களை வைத்து இருக்கிறார். மேலும் இன்ஸாடாகிராமில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் பயன்பாட்டாளர்கள் அதிகம் அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமில் தான் நடிகைகள் அதிகம் கவர்ச்சி மிகுந்த போட்டோசூட்களையும் புகைப்படங்களையும் பதிவேற்றுகின்றனர் .

இவர் படங்களை தவிர்த்து சமீபத்தில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் லோகேஷ் கனகராஜின் எழுத்தில் உருவான வெள்ள ராஜா எனும் இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். அதில் பாபி சிம்கா, காயத்ரி சங்கர் யுதன் பாலாஜி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் .
சமீபத்தில் கூட சல்மான் கானின் தபாங் 3 படத்தின் தமிழ் விளம்பரத்தின் போது பார்வதியுடன் சேர்ந்து சல்மான் கான் படத்தை பற்றி பேசி விளம்பர படுத்தினார். அதில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

வளர்ப்பு பிராணிகளின் மீது அலாதி ப்ரியம் கொண்ட பார்வதி, தற்போது தனது செல்ல நாய் கூப்பருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி இருக்கிறார். அதில் எனது கூப்பருக்கான அன்பு சிறப்பானது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் அவர் அணிந்து இருக்கும் ஆரஞ்சு நிற ஆடை மிக அழகாக உள்ளது என்று ரசிகர்கள் ட்விட்டரில் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். பார்வதி அடுத்தாக தமிழில் வைபவ்வுடன் ஆலம்பனா படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











