உங்க சைஸ் என்ன? ஆபாசமாக கேட்ட நெட்டிசன்.. அஜித் பட நடிகையின் அசால்ட் பதில்!
சென்னை: உங்களின் சைஸ் என்ன என ஆபாசமாக கேட்ட நெட்டிசனுக்கு அசால்ட்டாய் பதில் கூறியிருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.
பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.
தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

ஆலம்பனா
தொடர்ந்து கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

கலக்கல் போட்டோ ஷுட்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் மாடர்ன் உடையில் அரைகுறையாக காட்டி கிறங்க வைப்பார். அவ்வப்போது சேலையிலும் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி கதறவிடுவார்.

சர்ச்சைக் கேள்விகள்
இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார் பார்வதி நாயர். அப்போது சிலர் அவரிடம் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டனர். அதற்கு அசால்ட்டாக பதில் அளித்து உள்ளார் பார்வதி நாயர்.

உங்கள் சைஸ் என்ன?
இதில் ஒரு ரசிகர் உங்களுடைய சைஸ் என்ன? என ஆபாசமாக கேட்டிருந்தார். இதனை பார்த்த நடிகை பார்வதி நாயர் எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ் சைஸ் எஸ் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video

நிர்வாண போட்டோ
இதேபோன்று பல சர்ச்சை கேள்விகளுக்கு அவர் கூலாக பதிலளித்துள்ளார். இதேபோல் நடிகை பிரியா மணியிடம் அண்மையில் ரசிகர் ஒருவர் நிர்வாண போட்டோ கேட்டிருந்ததும், அதற்கு அவர் விளாசி விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











