நானும் நயன்தாரா போல பாதிக்கப்பட்டு இருக்கேன்.. தனுஷ் விவகாரம்.. அதனால தான் ஆதரவு.. பார்வதி பளிச்!

சென்னை: நடிகர் தனுஷ் "ஓம் நமச்சிவாயா" என சொல்லிக் கொண்டு போலியான முகமூடியை போட்டுக் கொண்டு ஊரை ஏமாற்றி வருகிறார் என நடிகை நயன்தாரா சமீபத்தில் வெளியிட்ட 3 பக்கம் கொண்ட புகார் கடிதம் இணையத்தில் இடியாய் இறங்கியது. அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த உடனே நடிகை பார்வதி உள்ளிட்ட பல நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து லைக்குகளை போட்டது மேலும், சர்ச்சையை கிளப்பியது.

கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் தனுஷிடம் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தவும் பாடல்களை தனது ஆவணப்படத்திற்கு பயன்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அவர் NOC தரவில்லை என்றும் 3 செகண்ட் காட்சிக்கு 10 கோடி ரூபாய் கேட்டார் என்றும் நயன்தாரா தனுஷ் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.

nayanthara dhanush parvathy

தனுஷ் உடன் இணைந்து மரியான் படத்தில் நடித்த நடிகை பார்வதி முதல் ஆளாக அந்த போஸ்ட்டுக்கு லைக் போட்ட நிலையில், அதுகுறித்த கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்ப நயன்தாராவுக்கு ஏன் ஆதரவு அளித்தேன் என பார்வதி விளக்கமாக கூறியுள்ளார்.

பார்வதி முதல் நஸ்ரியா வரை: நடிகர் தனுஷுக்கு எதிரான பதிவை நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில், 10க்கும் மேற்பட்ட நடிகைகள் நயன்தாராவுக்கு அதிரடியாக ஆதரவு அளித்தனர். அதில் வேடிக்கை என்னவென்றால் பலரும் மலையாள நடிகைகள் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர்கள் என்பதுதான். மரியான் படத்தில் "இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன" என லிப் லாக் முத்தம் கொடுத்து நடித்த பார்வதி, வடசென்னை படத்தில் ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், நய்யாண்டி படத்தில் நடித்த நஸ்ரியா, கொடி படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன், 3 படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா போட்ட பதிவை பார்த்துவிட்டு ஆதரவு தெரிவித்தனர்.

பார்வதி விளக்கம்: லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா சினிமாவில் தனக்கான இடத்தை பெரும் போராட்டம் நடத்தி தானே உருவாக்கியவர். அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதில் நிச்சயம் உண்மைத் தன்மை இருக்கும் என உணர்ந்தேன். எனக்கு இதுபோன்ற ஒரு நிலை வரும் போது ஆதரவு தெரிவிக்க யாருமே இல்லாமல் நின்று இருக்கிறேன். அந்த நிலை நயன்தாராவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் ஆதரவு தெரிவித்தேன். நயன்தாராவுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்றாலும் குரல் கொடுப்பேன் என அபிராமி கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X