Actress Parvathy Thiruvothu: இயக்குநராக களமிறங்கும் மரியான் பட நாயகி.. அட இவங்கல்லாம் ஹீரோவா!

சென்னை: தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை பார்வதி திருவோத்து. பூ படத்தின் முலம் தமிழ் சினிமாவில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து தற்போது தங்கலான் படத்திலும் தொடர்ந்து வருகிறது. தங்கலான் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார் பார்வதி. படத்தில் இவருக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழில் குறைவான எண்ணிக்கையிலேயே இவர் நடித்துள்ளார். ஆனால் மலையாளத்தில் மிகவும் சிறப்பான கூட்டணிகளுடன் இணைந்து நடித்துள்ளார். பல அழுத்தமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அதிகமான படங்களில் நடித்துள்ளார் பார்வதி. சினிமாவில் மட்டுமில்லாமல் பல சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் பார்வதி.

Actress Parvathy Thiruvothu going to direct Malayalam movie with Mammootty amp amp Prithviraj

நடிகை பார்வதி திருவோத்து: நடிகை பார்வதி திருவோத்து தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் பூ படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்திருந்த பார்வதி, தொடர்ந்து 17 ஆண்டுகளை கடந்து நடித்து வரும் பார்வதி, தற்போது விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டவர்களுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்துமுடித்துள்ளார். விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் முக்கியமான மற்றும் அழுத்தமான கேரக்டரில் பார்வதி நடித்துள்ளார்.

தைரியமான நடிகை: சில நெறிமுறைகளை கொண்டு அவற்றின்படியே நாமும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள் பின்னால் செல்ல தன்னால் முடியாது என்று மிகவும் தைரியமாக பேசியவர் பார்வதி. தான் தன்னையும் தன்னுடைய வேலையையும் மதிப்பதாகவும் தன்னுடைய எண்ணங்கள் ஒத்துப் போகுபவர்களுடன் இணைந்து செயலாற்ற தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அப்படிப்பட்டவர்களுடன் இணைந்தே தான் இத்தனை ஆண்டு காலங்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய கருத்துக்களுடன் அவர்களின் கருத்துக்களும் ஒத்துப் போனால் மட்டுமே அவர்களும் தன்னுடன் பணியாற்றலாம் என்றும் கூறியுள்ளார்.

விரைவில் இயக்கம்: பூ, மரியான், பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி திருவோத்து விரைவில் இயக்குநராகவும் களமிறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருடைய இயக்கத்தில் நடிகர் மம்முட்டி ஹீரோவாக இணையவுள்ளது தற்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தில் நடிகர் பிரித்விராஜும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மலையாளத்தில் கீது மோகன்தாஸ் இயக்குநராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் சூழலில் அடுத்ததாக இயக்குநராக மிகப்பெரிய நடிகையாக பார்வதி களமிறங்கவுள்ளது மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.

மேனன் பெயரை தூக்கியவர்: பார்வதி மேனன் என்ற பெயரிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்த பார்வதி, தனது பெயரை பார்வதி திருவோத்து என்று மாற்றிவிட்டார். மேனன் என்பது ஜாதிப்பெயர் என்பதால் அதை அவர் நீக்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. பூ படம் இவருக்கு தமிழில் சிறப்பான அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்றாலும் முன்னதாகவே மலையாளத்தில் கடந்த 2006ம் ஆண்டிலேயே அவுட் ஆஃப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்த 2008ம் ஆண்டில் வெளியான பூ படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார். விஜய் டிவியின் புதுமுக நடிகைக்கான விருதையும் வென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X