அந்த மாதிரியான படம் பார்ப்பீங்களா.. நெட்டிசனின் விவகாரமான கேள்வி … கூலாக பதிலளித்த பார்வதி நாயர் !
சென்னை : நடிகை பார்வதி நாயர், நேரலையில் மோசமான கேள்வி கேட்ட இணையவாசிக்கு கூலாக பதிலளித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள பார்வதி ஹிந்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 83 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த பார்வதி நாயர் ரூபம் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

என்னை
பாப்பின்சு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார் பார்வதி நாயர். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து மலையாள திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

அறிமுகம்
மலையாள படங்களில் பிஸியாக நடித்து வந்த பார்வதி, நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இவரின் கதாபாத்திரம் இல்லை.
Recommended Video

அஜித் படத்தில்
2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார் பார்வதி நாயர். இந்த திரைப்படத்தை அடுத்து, உத்தமவில்லன்,கோடிட்ட இடங்களை நிரப்புக, மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார்.

அந்த மாதிரி படம்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் Ask me anything என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு கலகலப்பாக பதிலளித்துக் கொண்டு இருந்தார். அப்போது வில்லங்கமான ரசிகர் ஒருவர், நீங்க அந்த மாதிரி படங்களை பார்த்துள்ளீர்களா? என்று கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பார்வதி நாயர் தலையை ஆட்டிய படி நோ என்று கூலாக பதிலளித்துள்ளார்.

நாகரீகம் தெரியாத
நெட்டிசனின் இந்த மோசமான கேள்வியால் கடுப்பான இணையவாசிகள், நேரலையில் என்ன கேள்வி கேட்பது என்ற நாகரீகம் கூட தெரியாதா, என்ன இது கேள்வி என்று கடுமையாக திட்டி வருகின்றனர்.

ரூபம்
நடிகை பார்வதி நாயர், தற்போது இவர் ரூபம் திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். அதேபோல வைபவ்வுடன் ஆலம்பனா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











