கற்சிலை அருகே பொற்சிலை.. கோயிலில் போட்டோஷுட் நடத்திய பாவனி ரெட்டி!

சென்னை : சின்னத்தம்பி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை பாவனி ரெட்டி. இந்த சீரியல் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய முன்னாள் கணவரின் தற்கொலை குறித்து வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டார் பாவனி. இது அனைவரையும் நெகிழச் செய்தது.

இதையடுத்து நிகழ்ச்சியின் இடையில் இணைந்த நடன இயக்குநர் அமீர் பாவனியிடம் தன்னுடைய காதலை பகிர்ந்துக் கொண்டார். ஆனால் துவக்கத்தில் அவரது காதலை பாவனி ஏற்றுக் கொள்ளவில்லை.

 நடிகை பாவனி ரெட்டி

நடிகை பாவனி ரெட்டி

நடிகை பாவனி சின்னத்தம்பி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து இந்த சீரியல் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய அமைதியான செயல்பாட்டின்மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார். தொடர்ந்து ஒரு கட்டத்தில் தன்னுடைய முன்னாள் கணவரின் தற்கொலை குறித்து அனைவரிடமும தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டார்.

 அமீர் -பாவனி ஜோடி

அமீர் -பாவனி ஜோடி

அந்த நிகழ்ச்சியின் இடையில் இணைந்த நடன இயக்குநர் அமீர், பாவனியின் செயல்பாட்டின்மூலம் கவரப்பட்டு அவரிடம் தன்னுடைய காதலை ப்ரபோஸ் செய்தார். ஆனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த பாவனி, அமீரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தன்னுடைய அன்பை பகிர்வதில் எந்தக் குறையும் காட்டாமல் தொடர்ந்து வந்தார் அமீர். தொடர்ந்து அமீரின் காதலை வெயிட்டிங்கிலேயே வைத்திருந்தார் பாவனி.

 விக்ரமாதித்தனாக மாறிய அமீர்

விக்ரமாதித்தனாக மாறிய அமீர்

தன்னுடைய முயற்சியில் சிறிதும் தளராத விக்ரமாதித்தனாக மாறினார் அமீர். இவர்கள் காதல் கைகூட வேண்டும் என்று ரசிகர்களும் தங்களுடைய ஆர்வத்தை தெரிவித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடத் தெரியாமல் தடுமாறினாலும் அமீரின் கடுமையான முயற்சிக்கு சிறப்பாக கைக்கொடுத்தார் பாவனி. தொடர்ந்து இவர்களின் கடுமையான முயற்சிக்கு சிறப்பான பயனாக, அமீர் -பாவனி ஜோடி டைட்டில் வின்னரானார்கள்.

 அமீருக்கு ஓகே சொன்ன பாவனி

அமீருக்கு ஓகே சொன்ன பாவனி

இதையடுத்து அந்த மேடையிலேயே அமீரின் காதலுக்கு ஓகே சொன்னார் பாவனி. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தாங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் ஆனால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இருவரும் காதல் பறவைகளாக பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். சமீபத்தில் இருவரும் இணைந்து பாரீசுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு பாவனியை விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினார் அமீர்.

 அடுத்தடுத்த போட்டோஷுட்

அடுத்தடுத்த போட்டோஷுட்

அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமை நிரப்பி வருகிறார் பாவனி. அனைத்திலும் அழகு அள்ளுகிறது. இந்நிலையில் தற்போது கோயில் ஒன்றில் போட்டோஷுட் நடத்தியுள்ளார். வெள்ளை நிற புடவையில் பச்சை பார்டர் வைத்த புடவையில் ஹோம்லி லுக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்களில் மிகவும் அழகாக காணப்படுகிறார். கற்சிலை அருகே பொற்சிலையாக பாவனி மின்னுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

தன்னுடைய முதல் வாழ்க்கை மற்றும் அதன் தோல்வி கொடுத்த வலியிலிருந்து மீள முடியாமல் தவித்து வந்த பாவனிக்கு சிறப்பான மருந்தாக மாறியுள்ளார் அமீர். அதனால்தான் அமீரின் காதலை ஏற்க அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டார் பாவனி. இந்நிலையில், இவர்களது காதல் கைகூடியது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். விரைவில் திருமண செய்தியை இவர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X