நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?.. அந்தமாதிரி பொண்ணு இல்லை.. பவித்ரா லட்சுமி ஒப்பன் டாக்
சென்னை: திரையுலகை பொறுத்தவரை அழகிற்கு தான் மதிப்பம் மரியாதையும் கிடைக்கிறது. ஒரு நடிகை அல்லது நடிகர்கள் அழகாக இருந்தால் உடனே அவர்களை தேடி வாய்ப்புகள் குவிகின்றனர். இதில், சில பிரபலங்கள் அழகிற்காக பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்துகொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தீல் பிரபல நடிகை ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை விட்டிருக்கிறார். மேலும் அவர் கரியரை காலி பண்ண பார்ப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
ஓகே கண்மணி, நாய் சேகர் படங்களில் நடித்து வந்த பவித்ரா லட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தார். அதில், புகழ் ஜோடியாக குக் செய்து ரகளை செய்தார். இருவரது காம்பினேஷனும் காமெடியாகவும் கலகலப்பாகவும் இருந்தது. படங்களில் நடிக்கை வாய்ப்புகளை தேடினாலும், அவ்வப்போது ஆல்பம் பாடலுக்கும் நடனம் ஆடினார் பவித்ரா. கோவையை பூர்விமாக கொண்ட இவர் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்து இவர் தனது அழகிற்காக ஒரு விசயத்தை செய்ததாக பரவிய ஒரு வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி: பவித்ரா லட்சுமி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த தகவல் அறிந்த பவித்ரா மன வேதனையடைந்திருக்கிறார். இந்நிலையில், கடும் கோபத்துடன் எதிர்வினையாற்றாமல் பக்குவமாக தனது சமூகவலைதல பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இதற்கு நெட்டிசன்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
வதந்திகளை பரப்பாதீங்க: இதைத்தொடர்ந்து தற்போது அதற்கு விளக்கம் அளித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக வரும் செய்தி உண்மைக்கு புறம்பானதாக இருக்கிறது. மேலும், நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு எந்த சிகிச்சையும் பெறவில்லை.உங்களது பொழுதுபோக்கிற்காக எனது வாழ்க்கையில் விளையாட வேண்டாம். நான் சிகிச்சை பெறுவதாக சமூக ஊடகஙகளில் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. இதுபோன்ற வதந்திகளை பரப்பி என் வாழ்வை கெடுக்காதீர்கள். எனக்கு எதிர்காலம் உள்ளது. இன்னும் கடினம் ஆக்க வேண்டாம். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் எதை செய்ய வேண்டாம் என்று நினைப்பீர்களோ, அதை மற்றவர்களுக்கும் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபலங்கள்: தங்களது இடத்தை தக்க வைத்துகொள்ள காஸ்மெடிக் சர்ஜரி மற்றும் காஸ்மெடிக் பிளாஸ்டிக் சர்ஜரியும் திரை பிரபலங்கள் செய்துகொண்டுள்ளனர். அந்த வகையில், உதடு மற்றும் மூக்கை அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஸ்ருதிஹாசன் இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.தென்னிந்தியாவின் பியூ்டடி என அழைக்கப்படும் சமந்தா மூக்கு, கன்னம் மற்று உதடு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்த நயன்தாரா உடல் எடையை குறைக்க மற்றும் அதிகரிக்க லிபோசக்ஷன் என்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். ஜீரோ படத்திற்காக உடல் எடையை கூட்டிய தென்னிந்திய அழகி அணுஷ்கா எடையை குறைப்பதற்காக லிபோ ஃபேட் உறிஞ்சும் .சிகிச்சை மூலம் தனது உடல் எடையை மேம்படுத்தினார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது அழகை கூட்ட மார்பக சிகிச்சை, உதடு என பலமுறைய செய்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தனது அழகை மேம்படுத்த நாசி அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











