ரஜினி, விஜய், அஜித் குறித்து ஒரே வார்த்தை.. பிரபல நடிகையால் செம ஹேப்பியான ரசிகர்கள்!

சென்னை: பிரபல நடிகை நடிகர் ரஜினிகாந்த் குறித்து கூறிய ஒற்றை வார்த்தை அவரது ஒட்டு மொத்த ரசிகர்களையும் செம ஹேப்பியாக்கியிருக்கிறது.

Recommended Video

இசையில்லாமல் நடனம்..அசத்தும் ஹீரோயின்..வியக்கும் ரசிகர்கள்! - வீடியோ

பட்டேல் கி பஞ்சாபி ஷாதி என்ற பாலிவுட் படத்தில் நடித்தவர் நடிகை பயல் கோஷ். கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழ படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்தார். அதில் ஈரோட்டில் வசிக்கும் பாரம்பரிய பெண்ணாக நடித்திருப்பார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில் படம் இதுவரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

ரசிகர்களுடன் உரை

ரசிகர்களுடன் உரை

இந்நிலையில் தற்போது, கோய் ஜானே நா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் பயல் கோஷ் அண்மையில் தனது ரசிகர்களிடம் டிவிட்டர் வாயிலாக பேசினார்.

ரஜினிகாந்த் கடவுள்

ரஜினிகாந்த் கடவுள்

அப்போது ரஜினிகாந்தின் ரசிகர்கள், அவர் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டனர். அதற்கு நடிகை பயல் கோஷ் "கடவுள்" என்று கூறினார். அவரது இந்த பதிலை பார்த்த ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அவரது இந்த பதிலையும் ரசிகர்கள் ரீட்டிவிட் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

அதேபோல் நடிகர் விஜயின் ரசிகர்கள், அவர் குறித்து ஒரு வார்த்தையில் கருத்து கூறுமாறு கேட்டனர். அதற்கு சூப்பர் ஸ்டார் பதிலளித்தார் பயல் கோஷ். அவரது இந்த பதிலை பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிம்ப்ளி சூப்பர்

சிம்ப்ளி சூப்பர்

இதேபோல் அஜித் ரசிகர்களும் அவர் குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த நடிகை பயல் கோஷ், அஜித்தின் வேதாளம் படத்தை தான் பார்த்ததாகவும் என்ன ஒரு வெறித்தனமான நடிப்பு என்றும் பாராட்டினார். மேலும் அவரை பற்றி பேச வேண்டுமானால் சிம்ப்ளி சூப்பர்ப் என்று கூறியுள்ளார்.

ஹேன்ட்சம்

ஹேன்ட்சம்

இதேபோல் சூர்யா குறித்த கேள்விக்கு பதிலளித்த பயல், அவர் ரொம்ப ஹேன்ட்சம் என்றும், கோலிவுட் நட்சத்திரங்களில் தனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் என்றும் கூறியிருக்கிறார். இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X