ஜிகு ஜிகு உடையில் மண்டைக்கு மேலே பவ்... பாயல் ராஜ்புட்டின் க்யூட்னஸ் ஓவர்லோடெட் பிக்ஸ் !

சென்னை : தெலுங்கில் வெளியான ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை பாயல் ராஜ்புட்

தமிழில் இப்பொழுது ஏஞ்சல் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின், கயல் ஆனந்தி ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இப்போதைக்கு தெலுங்கு சினிமாவில் மட்டும் அதிக கவனம் செலுத்தி படங்களில் நடித்து வரும் பால் ராஜ்புட் மண்டைக்கு மேலே பவ்வை வைத்து கொண்டு எடுத்த க்யூட்னஸ் ஓவர்லோடெட் புகைப்படங்கள் வைரலாகிறது .

பெரிய அளவு கவனிக்கப்படவில்லை

பெரிய அளவு கவனிக்கப்படவில்லை

தெலுங்கு சினிமாவை ஆட்டிப்படைக்கும் இளம் நடிகைகளில் ஒருவரான பாயல் ராஜ்புட் தமிழில் இருவர் உள்ளம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் குறித்த தேதியில் வெளியாகாததால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு கவனிக்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் தான் இருவர் உள்ளம் வெளியானது. இருப்பினும் தெலுங்கில் பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளார்

தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக

தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக

இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் கார்த்திகேயா நடித்த ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தில் நெகட்டிவ் கலந்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்த பாயல் ராஜ்புட் ஒரே திரைப்படத்தில் ஓவர் நைட்டில் தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார். ஆர்எஸ் 100 கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து வெங்கி மாமா,டிஸ்கோ ராஜா என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார்

தமிழுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி

தமிழுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி

தெலுங்கு,பஞ்சாபி,ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் பாயல் ராஜ்புட் தமிழுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இயக்குனர் கே எஸ் அதிகமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஏஞ்சல் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மற்றுமொரு கதாநாயகியாக கயல் ஆனந்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜிகு ஜிகு உடையில் தலையில் பவ்

ஜிகு ஜிகு உடையில் தலையில் பவ்

கன்னட சினிமாவையும் விட்டு வைக்காத பாயல் ராஜ்புட் இப்போது ஹெட் பெஸ் என்ற படத்தில் நடித்து கன்னட சினிமாவிலும் கால்தடத்தை பதிக்கிறார். மிக விரைவிலேயே தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் பாயல் ராஜ்புட் கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சம் கூட குறை வைப்பதில்லை. திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் இவர் தாராளமாக கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஆனந்தத்தில் மிதக்க விடுகிறார். அந்த வகையில் இப்பொழுது ஜிகு ஜிகு உடையில் பவ்வை தலையில் வைத்துக்கொண்டு செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள க்யூட்னஸ் ஓவர்லோடெட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X