தொடையை காட்டி இளசுகளுக்கு கொக்கி போடும் கவர்ச்சி புயல்… திணறிப்போன இன்ஸ்டா !

ஹைதராபாத் : தெலுங்கு சினிமாவில் சமீப காலமாக தனது கவர்ச்சியின் மூலம் கலங்க வைத்து வரும் நடிகை பாயல் ராஜ்புத் விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட பாயல் நடிகர் வெங்கடேஷ், ரவி தேஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி காட்டுவதில் சற்றும் சளைக்காத பாயல் மொட்டைமாடியில் பளபளக்கும் கால்கள் தெரிய சாய்ந்து படுத்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து உள்ளார்.

அஜித்துக்கு வில்லனாக

அஜித்துக்கு வில்லனாக

வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து வரும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவின் அசத்தலான நடிப்பில் 2018ல் வெளியாகின ஆர் எக்ஸ் 100 திரைப்படம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தில் வில்லி கலந்த கதாநாயகி பாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்த பாயல் ராஜ்புத் இப்போது தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கவர்ச்சி அலை வீச

கவர்ச்சி அலை வீச

ஹிந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் நடிக்க ஆரம்பித்த பாயல் ராஜ்புத் ஆர் எக்ஸ் 100 படத்திற்குப் பிறகு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வர இப்பொழுது தமிழ் திரையுலகமும் கதவை திறந்து விட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் பாயல் ராஜ்புத் விரைவில் தமிழிலும் அறிமுகமாக இருக்கும் நிலையில் இங்கும் பல திரைப்படங்களில் கவர்ச்சி அலை வீச வைத்து அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஞ்சல்

ஏஞ்சல்

உதயநிதி ஸ்டாலின், பாயல் ராஜ்புத் உடன் ஆனந்தியும் இரண்டாம் கதாநாயகியாக நடிக்க உள்ள நிலையில் இதற்கு "ஏஞ்சல்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் அதியமான் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைக்க விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

மல்லாந்து படுத்தவாறு

மல்லாந்து படுத்தவாறு

இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் விரைவில் முன்னணி நடிகையாக வர இருக்கும் பாயல் ராஜ்புத் படங்களில் மட்டும் அல்லாமல் போட்டோ ஷூட்களிலும் கவர்ச்சி காட்ட கொஞ்சம் கூட தங்குவதில்லை. இந்த நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பளிங்கு போல பளபளப்பாக இருக்கும் தனது தொடையைக் காட்டி கொண்டு மல்லாந்து படுத்தவாறு ஓவர் கிளாமரான ட்ரெஸ்ஸில் பார்க்கும் அனைவரையும் ஜொள்ளு விட வைக்கும் இந்த மொட்டை மாடி கவர்ச்சி போட்டோ சூட்டை கிளப்பி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X