நடுமூக்கில் மோதிர மூக்குத்தி .. டிஸ்கோ ராணி உடையில் கலக்கும் பாயல் ராஜ்புட்!
சென்னை : தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ள நடிகை பாயல் ராஜ்புட்க்கு ஆர்எக்ஸ் 100 திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
டிஸ்கோ ராஜா, வெங்கி மாமா உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இப்போது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார்
தமிழில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ஏஞ்சல் என்ற படத்தில் நடித்து வரும் பாயல் ராஜ்புட் இப்பொழுது நடுமூக்கில் மோதிர மூக்குத்தியுடன் டிஸ்கோ ராணி போல கண்ணைப் பறிக்கும் உடையில் வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நெகட்டிவ் ஷேட் கலந்த கதாநாயகியாக
இந்தியில் பல வெற்றிகரமான சீரியல் தொடர்களில் கதாநாயகியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதைக் கவர்ந்த நடிகை பாயல் ராஜ்புட் இப்பொழுது தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். குறிப்பாக தெலுங்கு திரைப்படத் துறையில் இவர் பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆர்எக்ஸ் 100 திரைப்படம் மூலமாக ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். அறிமுக இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் வலிமை பட வில்லன் கார்த்திகேயா ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் நெகட்டிவ் ஷேட் கலந்த கதாநாயகியாக நடித்து பாராட்டுக்களை பெற்ற பாயல் ராஜ்புட் ஓவர் நைட்டில் தெலுங்கு ரசிகர்களின் ராணியாக மாறினார்.

புது மார்க்கெட்டை உருவாக்கி
ஆர்எக்ஸ் 100 வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பாயல் ராஜ்புட் வெங்கடேஷுடன் இணைந்து வெங்கி மாமா மற்றும் ரவி தேஜாவுக்கு ஜோடியாக டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென புது மார்க்கெட்டை உருவாக்கி கொண்டார். கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் வஞ்சனை இல்லாமல் ரசிகர்களை மகிழ்வித்து வரும் இவர் தற்போது தமிழிலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் ஏஞ்சல்
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கே எஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகிவரும் ஏஞ்சல் திரைப்படத்தில் பாயல் ராஜ்புட் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவருடன் இணைந்து கயல் ஆனந்தியும் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏஞ்சல் திரைப்படம் ரிலீசுக்குப் பிறகு தொடர்ந்து தமிழ் படங்களில் பாயல் ராஜ்புட் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.
Recommended Video

நடு மூக்கில் மோதிர மூக்குத்தி
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் மிக பிஸியாக உள்ள பாயல் ராஜ்புட் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை திணறடிக்கிறார். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக நடு மூக்கில் மோதிர மூக்குத்தி குத்திக் கொண்டு டிஸ்கோ ராணி போல கண்ணைப் பறிக்கும் கருப்பு உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள அட்டகாசமான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications











