கடற்கரையில் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கும் பாயல் ராஜ்புட்.. யாருக்காகன்னு தெரியலையே !
சென்னை : தெலுங்கில் பிரபலமான நடிகையாக உள்ள நடிகை பாயல் ராஜ்புட் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கார்த்திகேயாவுக்கு ஜோடியாக ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தில் நடித்து ஓவர் நைட்டில் தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.
கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் வஞ்சனை வைக்காத பாயல் ராஜ்புட் இப்பொழுது கவர்ச்சி உடையில் சொட்டச் சொட்ட நனைந்த படி கடற்கரையில் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் யாருக்காகன்னு தெரியலையே என புலம்பி வருகின்றனர்.

ஹிந்தி சீரியல்களில்
இருவர் உள்ளம் என்ற தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் கால் தடத்தை பதித்த பாயல் ராஜ்புட்-க்கு இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. திரையரங்குகளில் வெளியாகாமல் படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த பாயல் ராஜ்புட் 2017ல் சென்னா மேரேயா என்ற பஞ்சாபி படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஹீரோயின் கலந்த நெகட்டிவ் ரோலில்
அதைத் தொடர்ந்து ஹிந்தியில் வீரே கி வெட்டிங்க என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து ஹிந்தியிலும் அறிமுகமானவர் தெலுங்கு திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை. இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் கார்த்திகேயா ஹீரோவாக நடித்திருந்த ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் அறிமுகமானார். ஹீரோயின் கலந்த நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த பாயல் ராஜ்புட் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆர்எஸ் 100 திரைப்படம் பெரும் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தின் ரிலீசுக்கு பிறகு ஓவர் நைட்டில் தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறினார்.

மீண்டும் தமிழில் படங்களில்
அடுத்தடுத்து தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் பாயல் வெங்கடேஷுக்கு ஜோடியாக வெங்கி மாமா மற்றும் ரவி தேஜாவுக்கு ஜோடியாக டிஸ்கோ ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து இப்பொழுது தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் தமிழில் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

கவர்ச்சி உடையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி
அந்த வகையில உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஏஞ்சல் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் கேஎஸ் அதியமான் இயக்க மற்றோரு கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி, பஞ்சாபி என இந்திய அளவில் பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக உள்ள பாயல் ராஜ்புட் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். வஞ்சனை இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் இவர் இப்பொழுது கடற்கரையில் கவர்ச்சி உடையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி யாருக்காகவோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது போல புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யாருக்காகன்னு தெரியலையே என புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











