இதுதான் பிரேக்கிங் நியூஸ் டிரெஸ்சா..? லாக்டவுன்ல நம்ம ஹீரோயின்கள் எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க..?
சென்னை: பிரபல நடிகை அணிந்துள்ள நியூஸ்பேப்பர் டிரெஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியில் வீர் கி வெட்டிங் படத்தில் நடித்தவர் பாயல் ராஜ்புத். பஞ்சாபியில் சில படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்துவருகிறார்.
தமிழில், ஏஞ்சல் என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார்.

சமூக வலைத்தளம்
அஞ்சலி உட்பட பலர் நடிக்கின்றனர். இமான் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த வருடம் தொடங்கியது. பிறகு படம் பற்றிய தகவல் இல்லை. தெலுங்கில் கார்த்திகேயா நடித்த ஆர்எஸ் 100, வெங்கடேஷ், நாக சைதன்யா நடித்த வெங்கி மாமா, ரவிதேஜாவின் டிஸ்கோ ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவார்.

ஊரடங்கு
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த வைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பீதி ஏற்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கின்றனர். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர்.

ரசிகர்கள்
இந்த லாக்டவுனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வீடியோவாகவும் போட்டோவாகவும் நடிகர், நடிகைகள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதை ஏராளமான ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். அவர்களுக்கும் வேறு பொழுதுபோக்கு இல்லை என்பதால், நடிகர், நடிகைகளின் சமூகவலைத்தளப் பக்கங்களை பின் தொடர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

டிசர்ட் சேலஞ்ச்
இதற்கிடையே, நடிகர், நடிகைகள் புது புது சேலஞ்சை அறிமுகப்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் டிசர்ட் சேலஞ்ச் பரபரப்பாகப் பேசப்பட்டது. தலைகீழாக நின்றபடி டிசர்ட் அணிய வேண்டும் என்பது இந்த சேலஞ்ச். சில நடிகைகள் இதை செய்து வீடியோ வெளியிட்டனர். பின்னர் தலையணையை மட்டும் அணிந்தபடி பில்லோ சேலஞ்ச் டிரெண்டானது.

நியூஸ்பேப்பர் டிரெஸ்
அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை வெளியிட வேண்டும். இதை சில நடிகைகள் செய்தனர். நடிகை பாயல் ராஜ்புத்தும் தலையணையை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது பரபரப்பானது. இப்போது நடிகை பாயல் ராஜ்புத், செய்தித்தாள்களை அணிந்தபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நானே வடிவமைத்தேன்
இதற்கு ரசிகர்கள் பலர் கண்டபடி கமென்ட் அடித்து வருகின்றனர். ஒருவர், இதுதான் பிரேக்கிங் நியூஸ் டிரெஸ்சா? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அவர், எனது உடைகளை நானே வடிவமைக்கிறேன். இது நானே வடிவமைத்த டிரெஸ்.. அவ்வளவு எளிதாக வேலை முடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்களை ஏமாத்தாதீங்க
'நீங்க எதை உடுத்தினாலும் பரபரப்பாகிடுது என்று சிலர் தெரிவித்துள்ளனர். சிலர் கிண்டல் பாய்ஸ், 'பார்த்துமா படிச்சுட்டு கிழிச்சிட போறாங்க?' என்று கூறியுள்ளனர். சிலர், இதுவும் சேலஞ்சா? முடியலை என்று கூறியுள்ளனர். 'இதுமாதிரி போட்டோவெல்லாம் இனிமேல் போடாதீங்க. என்னை மாதிரி ரசிகர்களை இப்படி ஏமாத்தாதீங்க' என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











