சாரி, நோ டேட்ஸ்: ஹாலிவுட் பட வாய்ப்பை ஏற்க மறுத்த நடிகை
மும்பை: இந்தி நடிகை பாயல் ரொஹத்கி தனக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.
பாலிவுட் நடிகைகள் பலருக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. அதில் சிலர் வந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும் சிலர் கால்ஷீட் பிரச்சனையால் வாய்ப்பை ஏற்க மறுக்கின்றனர்.
இந்நிலையில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை ஹாலிவுட் வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.

பாயல்
மாடலும், நடிகையுமான பாயல் ரொஹத்கியை ஹாலிவுட் படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

தோஹா
கத்தார் தலைநகர் தோஹாவில் புத்தாண்டை வரவேற்க நடந்த நள்ளிரவு நிகழ்ச்சியில் பாயல் நடனம் ஆடினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயக்குனரின் கண்ணில் அவர் பட்டார்.

ஹாலிவுட்
பாயலை பார்த்த இயக்குனர் அவரை அணுகி தான் தயார் செய்து வைத்துள்ள கதையை கூறினார். கதையை கேட்டதுமே பாயலுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

டேட்ஸ்
ஹாலிவுட் இயக்குனர் கதையை கூறிய பிறகு 2 ஆண்டுகளுக்கு கால்ஷீட் கேட்டுள்ளார். அவ்வளவு காலம் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் பாயல் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

வாய்ப்புகள்
பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வருகிறது. அதனால் ஹாலிவுட் படத்திற்கு 2 ஆண்டு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்றார் பாயல்.


Click it and Unblock the Notifications











