வேட்டி, சட்டையில் அமலா பால் போஸ்.. அப்படியே ஒரு லுங்கி டான்ஸ் போடுங்க.. பிரபல நடிகை ரெக்வஸ்ட்!
திருவனந்தபுரம்: நடிகை அமலா பால் வேட்டி, சட்டை மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் வெளியான நீலத்தாமரா படத்தில் துணை நடிகையாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமான அமலா பால், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்துள்ளார்.
மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அமலா பால், கடைசியாக ஆடை படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிறம்.. கருகரு கூந்தல்.. 7500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 'கால்பியா' இப்படித்தான் இருந்திருப்பார்!

அமலா பால் நடிப்பில்
மாஸ்டர் ரைட்டர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தைத் தொடர்ந்து அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள ‘அதோ அந்த பறவை போல' படம் பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. பிருத்விராஜின் ஆடுஜீவிதம், காடவர், லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸ் என அமலா பால் நடிப்பில் ரிலீசுக்கு பல படங்கள் காத்திருக்கின்றன.

நேரடி ஆன்லைன் ரிலீஸ்
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு வராமல் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி வரும் நிலையில், அமலா பாலின் நீண்ட நாள் காத்திருப்பு படமான அதோ அந்த பறவை போல படமும் ஆன்லைன் ரிலீஸ் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திரிஷாவின் பரமபதம் படத்திற்கு இதே பேச்சுக்கள் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

டிராகன் ஃப்ரூட்
லாக்டவுன் தளர்வுகள் கேரளாவில் அறிவிக்கப்பட்ட நிலையில், காரில் ஊர் சுற்ற கிளம்பிய நடிகை அமலா பால், சமீபத்தில், மஞ்சள் நிற குர்தாவை அணிந்தபடி, தான் ஒரு டிராகன் ஃப்ரூட் என்றும் கடந்த ஆண்டு தான் மாம்பழம் என்று தன்னை வர்ணித்துக் கொண்டதையும் அண்மையில் ஷேர் செய்து வைரலாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆத்ம திருப்தி
ஓஷோ, ஜக்கி வாசுதேவ் புத்தகங்களை இந்த லாக்டவுனில் படித்து வரும் நடிகை அமலா பால், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களுக்கு இணையாக தத்துவ மெசேஜ்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். அண்மையில், உங்கள் ஆன்மாவை திருப்திபடுத்துங்க போதும், அடுத்தவங்கள திருப்தி படுத்த வேண்டாம் என பதிவிட்டு இருந்தார்.

வேட்டி, சட்டை
இந்நிலையில், தற்போது தனது சகோதரர்களுடன் வேட்டி, சட்டையில் மாஸ்க் அணிந்தபடி வெளியே மழையை ரசித்த படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். ஆண்களை போல வேட்டி அணிந்தபடி அமலா பால் இருக்கும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. பல பிரபலங்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

லுங்கி டான்ஸ்
அமலா பாலின் இந்த புகைப்படத்தை பார்த்த மலையாள பிக்பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகையான பியர்லே மானி எனும் பிரபலம், அப்படியே ஒரு லுங்கி டான்ஸ் போடுங்க என கமெண்ட் செய்துள்ளார். காஸ்ட்யூம் சூப்பர் என்றும், கலக்குறீங்க, அழகா இருக்கிறீங்க என்றும் பல்வேறு கமெண்ட்டுகளும் அமலா பாலின் இந்த போட்டோவுக்கு குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











