மீண்டும் களமிறங்கும் பியா பாஜ்பாய்.. வித்தியாசமான போட்டோ சூட்!

மும்பை: வித்தியாசமான உடையில் போட்டோக்களை வெளியிட்டு பியா பாஜ்பாய் அசத்தியுள்ளார்.

Recommended Video

Ajith Heroine Mantra drastic Transformation | Mantra

லாக்டவுன் காரணமாக இப்பொழுது சினிமாவின் நிலை சரியில்லாத காரணத்தினால் பல நடிகர் நடிகைகள் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற பல இடங்களில் தங்கள் பதிவுகளை போட்டு வருகின்றனர் .

அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது ஆகும். பல பெரிய நட்சத்திரங்கள் அதில் தங்களது பதிவுகளை போட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

 சுசன் முறையில் சேலை

சுசன் முறையில் சேலை

இந்நிலையில் அனைவருக்கும் சவால் விடும் விதமாக நடிகை பியா பாஜ்பய் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவர் பதிவிட்டுள்ளார். இந்திய பாரம்பரிய உடையான சேலையுடன் மேற்கத்திய உடைகளை சேர்த்து சுசன் முறையில் அணிந்து கொண்டு அவர் அதில் போஸ் கொடுத்துள்ளார்.

 மனதில் இடம்

மனதில் இடம்

நடிகை பியா பாஜ்பய் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் "பொய் சொல்லப் போறோம்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து, அஜித்துடன் ஏகன் படத்தில் கல்லூரி மாணவியாக வந்து அசத்தி இருப்பார். பின்னர் "கோவா", "கோ" போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

 இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

கோவா திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்த பியா அந்த படத்தில் வரும் "இதுவரை இல்லாத நினைவுகள் இது" என்ற பாடலில் அற்புதமாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்டார். அந்த, படத்தில் அவரின் இயல்பான நடிப்பு அனைவருக்கும் பிடித்து இருந்தது. மேலும் அப்படம் முழுவதும் அவர் அணிந்திருந்த ஆடைகள் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விதமாக இருந்தது தான் கூடுதல் சிறப்பு.

 தமிழில் வாய்ப்பு இல்லை

தமிழில் வாய்ப்பு இல்லை

ஜீவா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கோ‘ திரைப்படத்தில் துருதுருவென இருக்கும் ஒரு ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அந்த படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கோ படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இருப்பினும் அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பிற மொழி படங்களில் நடித்து வந்த பியா, தற்போது மீண்டும் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X