சிக்குன்னு இருக்கும் உடம்பில் நச்சுனு ஒரு போஸ்.. கோவா பட நடிகையின் தாறுமாறு பிக்ஸ்!
மும்பை : நூடுல்ஸ் மண்டை என பலராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகை பியா பாஜ்பாய் இப்பொழுது ஹிந்தியில் படுபிஸியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழிலும் இவர் திரைப்படங்களில் நடித்திருக்க அதில் ஏகன், கோவா, கோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நற்பெயரையும் ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுத்தந்தது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவரது புகைப்படங்கள் பல தாறுமாறாக வட்டமிட்டு வரும் நிலையில் இப்போது சிக்குன்னு இருக்கும் தனது உடம்பை காட்டிக்கொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தை கலக்கி வருகிறது.

சுட்டிப் பெண்ணாக
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளமை ததும்ப உருவான கோவா திரைப்படத்தில் சுட்டிப் பெண்ணாக நடித்து நம் அனைவரையும் கவர்ந்த நடிகை பியா பாஜ்பாய் அதைத்தொடர்ந்து கே. வி ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்திலும் ஹீரோ ஹீரோயினுக்கு இணையாக செமயாக ஸ்கோர் செய்திருந்தார்.

தனி இடத்தை
அவ்வாறு எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தனது துடிப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்து வரும் நடிகை பியா பாஜ்பாய் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

காதலர்களின் ஃபேவரிட்
கோவா திரைப்படத்தில் வரும் "இதுவரை இல்லாத உணர்விது" பாடலில் இவரின் நடிப்பு மிகப் பிரபலமாக பேசப்பட்ட நிலையில் இன்று வரை இந்த பாடல் காதலர்களின் ஃபேவரிட் பாடலாக இருந்து வர, கோ திரைப்படத்தில் சரோ கதாப்பாத்திரம் பார்ப்போர் அனைவரையும் ரசிக்க வைத்ததோடு இவருக்கான தனது ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியது.

அடிக்கடி வைரலாகி
இந்நிலையில் சமீபகாலமாக இந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் பியா பாஜ்பாய் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் என மாறி மாறி படு பிஸியாக நடித்து வரும் அதே சூழலில் சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது.
Recommended Video

சிக்குன்னு இருக்கும் உடம்பை
அந்த வகையில் இப்பொழுது சூரிய வெளிச்சத்தில் டைட்டான உடையில் சிக்குன்னு இருக்கும் தனது உடம்பை காட்டிக்கொண்டு நச்சுனு ஒரு போஸ் கொடுத்திருக்கும் பியாவின் இந்த ருசிகர புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இணையதளத்தில் தாறுமாறு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications











