மீண்டும் முன்னாள் கணவரை நினைத்து உருகும் சிங்கள நடிகை.. 'அந்த' போட்டோக்களை ஷேர் செய்து உருக்கம்!
சென்னை: மீண்டும் தனது முன்னாள் கணவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து உருகியுள்ளார் சிங்கள நடிகை பியூமி ஹன்சமாலி.
நடிகை பியூமி ஹன்சமாலி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஒருவர். மாடலான பியூமி ஹன்சமாலி, சிங்கள மொழி படங்கள் மற்றும் மலையாள படஙஙகளில் நடித்து வருகிறார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் நடிகை பியூமி ஹன்சமாலி, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலம்.

ஹாட் போட்டோஸ்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது இந்தியா உட்பட பல்வேறு நாட்டு ரசிகர்களுக்கும் பிடித்தமானவராய் ஆகிவிட்டார். சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள நடிகை பியூமி ஹன்சமாலி அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

மகனுடன் ஆட்டம்
நடிகை பியூமி ஹன்சமாலிக்கு கவின் என்ற மகன் உள்ளார். அடிக்கடி தனது மகனுடன் அவுட்டிங் செல்லும் போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார். மகனுடன் டிக்டாக்கில் ஆட்டம் போடும் வீடியோவையும் அவ்வப்போது அப்லோட் செய்து வருகிறார்.

எப்படி இருப்பார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது எக்ஸ் ஹஸ்பென்டை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கூறி அவருடன் இருந்த போட்டோக்களை ஷேர் செய்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் பல ஆண்களுடன் குடியும் கும்மாளமுமாய் இருந்து வரும் உங்களுடன் இருப்பார் என விளாசினர்.

மறக்க முடியவில்லை
அதேநேரத்தில் வேனுரா ஹெஷன் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பியூமி ஹன்சமாலியுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை எல்லாம் ஷேர் செய்திருந்தார். மேலும் உன் முகத்தை என்னால் மறக்க முடியவில்லை என்றும் மிஸ் யூ என்றும் ரொம்பவே உருக்கமாக கூறியிருந்தார்.

பியூமி டிவிட்
அவர் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் பியூமியும் பிரிந்ததற்கான காரணம் என்ன என்று கேட்டு வந்தனர். ஆனால் அதற்கெல்லாம் அவரது தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் நடிகை பியூமி ஹன்சமாலி, தனது டிவிட்டர் பக்கத்தில் தனது முன்னாள் கணவர் குறித்து டிவிட்டியுள்ளார்.

கட்டியணைத்தப்படி..
மேலும் அவருடன் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார். அதன்படி வேனுரா ஹெஷன் தான் பியூமியின் முன்னாள் கணவர் என தெரிந்துள்ளது. இருவரும் கட்டியணைத்தப்படி நெருக்கமாக உள்ள போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

சேர்ந்தே வாழலாம்
அந்த இரண்டு போட்டோக்களுக்கும் மிஸ் யூ டியர் என்றும் மிஸ் யூ மை எக்ஸ் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படி மாறி மாறி மிஸ் யூ சொல்வதற்கு பதில் ரெண்டு பேரும் சேர்ந்தே வாழலாம் என்று என்று அட்வைஸ் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











