44 வயசாகிடுச்சி.. வயதை வெளிப்படையாக சொன்ன நடிகை.. ஓல்ட் ஈஸ் கோல்ட் மீண்டும் நடிக்க வாங்க!

சென்னை : நடிகை பூஜா அஜித், மாதவன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்.

தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்த பூஜா ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து காணாமல் போனார்.

இலங்கையை சேர்ந்த பூஜா, தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை பூஜா

நடிகை பூஜா

நடிகை பூஜா மாதவனுடன் இணைந்து ஜே ஜே என்ற படத்தில் கடந்த 2003ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கவர்ச்சி, நடிப்பு, அழகு என முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். கோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக ஒரு வலம் வருவார் என்று கணிக்கப்பட்டார்.

அஜித்துடன் அட்டகாசம்

அஜித்துடன் அட்டகாசம்

தொடர்ந்து அஜித்துடன் அட்டகாசம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இவரது துறுதுறுவென்ற உடல்மொழி இவரை சிறப்பான நடிகையாக வெளிப்படுத்தியது. தொடர்ந்து பட்டியல், பொறி, ஓரம்போ, நான் கடவுள் என அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்தார். இதில் ஆர்யாவுடன் இரண்டாவது முறையாக நடித்திருந்த நான் கடவுள் படம் இவருக்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்தது.

அழுத்தமான கதைகள்

அழுத்தமான கதைகள்

தொடர்ந்து அழுத்தமான கதைகளில், அழுக்காகவே நடித்தார் பூஜா. இவரது அழகான மற்றும் கவர்ச்சியான உடல்வாகை இந்தப் படங்கள் எடுத்துக்காட்ட தவறிவிட்டன. முதலில் வெளியான ஜேஜே உள்ளிட்ட படங்களில் அழகான தன்னை வெளிப்படுத்திக் கொண்ட பூஜாவை நான் கடவுள் படத்தில் கண்ணில்லாதவராக ஏழை பெண்ணாக ஏற்றுக் கொள்ள இவரது ரசிகர்கள் தயக்கம் காட்டினர்.

கனவான படவாய்ப்புகள்

கனவான படவாய்ப்புகள்

தொடர்ந்து கமர்ஷியல் படங்களிலும் கவனம் செலுத்த தவறிய பூஜாவிற்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கனவானது. தொடர்ந்து சிங்களத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு செட்டிலான பூஜா, தொடர்ந்து நடிக்கவில்லை. இவரை இவரது ரசிகர்கள் மிகவும் அதிகமாக மிஸ் செய்தனர்.

ரசிகர் கேள்வி

ரசிகர் கேள்வி

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காலத்தில் ஒரு கோஸ்ட் இருந்தது என்று ரசிகர் ஒருவர் பூஜாவின் புகைப்படங்களை வைத்து பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த பூஜா, தன்னை நியாபகம் வைத்திருப்பதற்கு ரசிக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அனைவரும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க கடவுள் ஆசிர்வதிக்கப்பட்டும் என்றும் கமெண்ட் செய்திருந்தார்.

வயதை வெளிப்படுத்திய பூஜா

வயதை வெளிப்படுத்திய பூஜா

இதையடுத்து மற்ற ரசிகர் ஒருவர், மீண்டும் நடிக்க வர பூஜாவிடம் கேட்க, அதற்கு அவர், ஐயோ தற்போது 44 வயதாகிவிட்டது என்றும் மீண்டும் நடிக்க வந்தால் சித்தி கேரக்டர்தான் கொடுப்பார் என்றும் கூறியுள்ளார். எந்த நடிகையும் தனது வயதை வெளிப்படையாக இப்படி சொல்லமாட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தில் பூஜா போல்டாக வயதை சொன்னது ரசிகர்களை ஆச்சர்யம் கொள்ள வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X