ஹாட் ரெட் சில்லி… பீஸ்ட் நாயகியின் வேறலெவல் போட்டோஸ் !

சென்னை : தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையும் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் நாயகிமான பூஜா ஹெக்டே சிவப்பு நிற ஜிம் ஷூட்டில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.

தளபதிக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தின் நடித்து வருவதால், இவர் எது செய்தாலும் அதனை ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.

ஜிம் உடையில் இருக்கும் புகைப்படத்தையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட பூஜா ஹெக்டே மாடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் இவர், 2010ம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா என்ற அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பெற்றார்.

முகமூடியில் அறிமுகம்

முகமூடியில் அறிமுகம்

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா. தமிழ் சினிமாவில் வந்த முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இருப்பினும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தராமல் தோல்வியைத் தழுவியது.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

தெலுங்கு பக்கம் சென்ற இவரை, தெலுங்கு திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிந்த வரவேற்றது. இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதைஅடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

புட்டபொம்மா நாயகி

புட்டபொம்மா நாயகி

முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரமலு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து பூஜாவை புகழின் உச்சியில் ஏற்றிவிட்டது.

பீஸ்ட் நாயகி

பீஸ்ட் நாயகி

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த பூஜா ஹெக்டே தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகி உள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

இந்த பட வாய்ப்புக்கு ரொம்ப WAIT பண்ணோம் | LOSLIYA & THARSHAN SPEECH | FILMIBEAT TAMIL
பக்கா போஸ்

பக்கா போஸ்

இந்நிலையில், உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட பூஜா ஹெக்டே, சிவப்பு நிற ஜிம் ஷூட்டில் அனைவரும் வியந்து போகும் அளவுக்கு பக்காவாக போஸ் கொடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தலை முதல் கால் வரை சிவப்பு நிற உடையில், இடுப்பில் சிவப்பு நிற ஜாக்கெட்டை ஸ்டைலாக கட்டியுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் பல லைக்குகளை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X