இன்று பிறந்தநாள் கொண்டாடும் பூஜா ஹெக்டே... அம்மணிக்கு இப்ப என்ன வயசு தெரியுமா?

சென்னை : தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு திரைப்பிரபலங்கள்,நெருங்கிய நண்பர்கள் என பலரும் வாழ்த்துக் கூறிவருகின்றனர். பூஜாவின் தீவிர ரசிகர்கள் #HappyBirthdayPoojaHegde என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், பீஸ்ட் படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவின் கேரக்டர் குறித்த முக்கியமான போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர். தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் முடித்தார். மாடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட பூஜா, தோழிகளுடன் இணைந்து பல விளம்பரங்களில் நடித்துள்ளார். இதையடுத்து, 2010ம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா என்ற அழகிப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

அறிமுகம்

அறிமுகம்

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா. முகமூடி தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். இருப்பினும் இத்திரைப்படம் வரவேற்பை பெறவில்லை.

ரசிகர்களின் மனதில்

ரசிகர்களின் மனதில்

தமிழ் படத்தின் மூலம் அறிமுகமான பூஜா, தெலுங்கில் ஒக்க லைலா கோசம் என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனத்தை கவர்ந்து புகழ் பெற்றார். இதையடுத்து, தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சூப்பர் ஹிட் பாடல்

சூப்பர் ஹிட் பாடல்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரமலு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்து பூஜாவை புகழின் உச்சியில் ஏற்றிவிட்டது.

பீஸ்ட் நாயகி

பீஸ்ட் நாயகி

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த பூஜா ஹெக்டே தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகி உள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்று பிறந்த நாள்

இன்று பிறந்த நாள்

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது 31வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், நெருங்கிய நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பூஜாவின் தீவிர ரசிகர்கள் #HappyBirthdayPoojaHegde என்ற ஹேஸ்டேகை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X