twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நோ பிரா.. நிக்கர் தெரிய டீப் ஓபன்.. விருது விழாவில் தெறிக்கவிட்ட ஜீவா பட ஹீரோயின்.. திணறிய ஃபேன்ஸ்!

    |

    Recommended Video

    போதைக்கு அடிமையான நடிகை | Top Actress in Trouble | Addiction to Drinks | Web Series

    கவுகாத்தி: கவுகாத்தியில் நடைபெற்ற பிலிம்ஃபேர் விருது விழாவில் நடிகை பூஜா ஹெக்டே அணிந்திருந்த டிரெஸ் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் பெற்றது.

    65வது அமேசான் ஃபிலிம் ஃபேர் விருது விழா நிகழ்ச்சி நேற்று அசாமில், கோலாகலமாக நடைபெற்றது. இந்த எடிஷனின் விருது விழா மும்பைக்கு வெளியே நடபப்து இதுவே முதல் முறையாகும்.

    இந்த விருது விழாவை பாலிவுட் பிரபலங்களான வருண் தவான், கரண் ஜோஹர், விக்கி கவுஷல் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த விருது விழாவில் பாலிவுட்டின் பெரும்பாலான பிரபலங்கள் பங்கேற்றனர்.

    கல்லி பாய் படம்

    குறிப்பாக நடிகைகள் ஆலியா பட், டாப்ஸி, பூஜா ஹெக்டே உட்பட ஏராளமான ஹீரோயின்கள் பங்கேற்றனர். இந்த பிலிம் ஃபேர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ரன்வீர் சிங்கும், சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட்டும் பெற்றனர். மேலும் அவர்கள் நடிப்பில் வெளியான கல்லி பாய் திரைப்படம், இந்த விருது விழாவில் அதிகபட்மாக 13 விருதுகளை குவித்தது.

    பூஜா ஹெக்டே

    பூஜா ஹெக்டே

    இந்த விழாவில் பங்கேற்ற நடிகைகள் அணிந்திருந்த உடைகள் மக்களின் கவனத்தை பெற்றது. பெரும்பாலான நடிகைகள் தங்களின் ஆடையின் மூலம் கவர்ச்சியில் தாராளம் காட்டினர். தமிழில் ஜீவாவின் முகமூடி படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமான பூஜா ஹெக்டேவும் இந்த விருது விழாவில் பங்கேற்றார்.

    வசூலை குவித்தது

    தமிழில் நடிகையாக அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, பாலிவுட் என கலக்கி வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹவுஸ்ஃபுல் படம் கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் தெலுங்கில் அவர் நடித்த ஆல வைகுந்தபுரமுலு படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    விரைவில் ரிலீஸ்

    வசூலிலும் சாதனை படைத்தது அந்தப் படம். தெலுங்கிலும் இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தெலுங்கில் மோஸ்ட் எலிஜிப்பில் பேச்சுலர், ஜான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

    நிக்கர் தெரிய

    இந்நிலையில் நேற்றைய பிலிம் பேர் விருது விழாவில் வெள்ளை நிற நீண்ட கவுனில் ஒய்யாரமாக பங்கேற்றார். ட்ரான்ஸ்ப்ரன்ட்டான இந்த கவுனில் அவரது நிக்கர் வரை தெரிந்தது. பூஜா ஹெக்டேவின் இந்த போட்டோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அவரது போட்டோவை லைக் செய்து வருகின்றனர்.

    Read more about: pooja hegde
    English summary
    Actress Pooja Hegde has participated in 65th Amazon Filmfare Awards 2020 function in Assam. She appeared in White colour Long goun with deep open.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X