Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போர்கள் வேண்டாம் அன்பை உருவாக்குவோம்.. பூஜா ஹெக்டேவின் அழகான வரிளுடன் க்யூட்டான க்ளிக் !
மும்பை : சமூக வலைதளங்களில் தன்னுடைய ரசிகர் பட்டாளங்களை நாளுக்கு நாள் அதிகரித்து பல மில்லியன் பாலோவர்ஸ்களை கடந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே.
ஒரே ஒரு பாட்டு தான், ஒட்டுமொத்த உலகத்தையும் சுழன்று சுழன்று ஆட வைத்து விட்டார் இந்த புட்ட பொம்மா பூஜா.
சில நாட்களுக்கு முன்பு பிரபாஸுடன் முதல் முறையாக இணையும் ராதே ஷ்யாம் பிரம்மாண்ட காதல் காவியா திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டு அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "போர்கள் வேண்டாம் அன்பை உருவாக்குவோம்" என தன்னுடைய க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"கடவுளுக்கு நன்றி" கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் ட்வீட்.. என்ன விஷயம் தெரியுமா?

சூப்பர் ஹீரோ திரைப்படத்தை
இந்திய திரைப்படங்களில் தனக்கென ஒரு தனித்துவமான பாதை அமைத்து வித்தியாசமான திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் மிஷ்கின் அதில் வெற்றியும் பெற்று வருகிறார். எதார்த்தமான கதைகளை கொண்டு நடிகர்களிடம் எதார்த்தமான நடிப்பை மட்டும் பெற்று சிறந்த படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் மிஸ்கின் நடிகர் ஜீவாவை வைத்து முகமூடி என்ற சூப்பர் ஹீரோ திரைப்படத்தை இயக்கி அதில் முதல் முறையாக பூஜா ஹெக்டேவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி இருந்தார்.

பாதையை திருப்பி கொண்டார்
பூஜா ஹெக்டே நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஹீரோ திரைப்படமாக அமைந்த போதிலும் அந்த படம் பூஜாவிற்கு வெற்றிப்படமாக அமையவில்லை, எனவே தமிழில் நடித்த முதல் திரைப்படமே தோல்விப் படமானதால் தனது பாதையை தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத்துறைக்கு திருப்பி கொண்டார்.

முன்னணி கதாநாயகி
அவ்வாறு நடிக்க தொடங்கிய தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் அடுத்தடுத்த படங்கள் நடிக்க கிடைக்க ஒக்க லைல கோசம், முகுந்தா, மொகஞ்சோ தாரோ மற்றும் துவ்வட ஜெகன்நாதம் உள்ளிட்ட திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி கதாநாயகியாக வலம் வர தொடங்கினார்.

உலகெங்கிலும் பிரபலமாகி
அல்லு அர்ஜுன், ராம் சரண், ரித்திக் ரோஷன் மற்றும் அக்சய்குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளிவந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் வரும் ஒரே ஒரு பாடலின் மூலம் உலகெங்கிலும் பிரபலமாகி பல கோடி மக்களை ரசிகர்களாக கொண்டு தற்பொழுது வெற்றி நாயகியாக வலம் வருகிறார்.

ராதே ஷ்யாம்
சமீபத்தில் வெளியான புட்ட பொம்மா பாடல் உலகில் உள்ள பல்வேறு மக்களால் ரசிக்கப்பட்டு ஆடிப்பாடி கொண்டாடி பின் அந்த பாடல் மிகப்பெரிய வைரலானது. இதனால் நாளுக்கு நாள் இவரது ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் உலகெங்கிலும் பாகுபலி நடிகராக உயர்ந்து நிற்கும் பிரபாஸுடன் இவர் முதன் முறையாக இணையும் "ராதே ஷ்யாம்" திரைப்படத்தின் முதல் பார்வை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
தனது அடுத்தடுத்த படத்திற்கான அப்டேட்டை தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வரும் பூஜா ஹெக்டே தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட்டான கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அன்பை உருவாக்குவோம்
மிகவும் குட்டியான உடையில் தனது அழகான தேகத்தைக் காட்டியவாறு படுக்கையறையில் ஸ்டைலாக உட்கார்ந்துகொண்டு தன்னுடைய மெல்லிய கூந்தலை வருடிக்கொண்டு மிகவும் க்யூட்டான பார்வை பார்த்தவாறு "போர்கள் வேண்டாம் அன்பை உருவாக்குவோம்" என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ள இந்த அட்டகாசமான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது மனதை பறி கொடுத்தவாறு இந்த அன்பான மற்றும் அழகான பதிவிற்கு சல்யூட் வைத்ததுடன் பாராட்டியும் வருகின்றனர்.