ப்பா.. 15 மில்லியன் ஃபாலோயர்ஸ்.. பீஸ்ட் பட நடிகையை மொய்க்கும் ஃபேன்ஸ்.. வைரலாகும் கொண்டாட்ட வீடியோ!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 15 மில்லியனாக அதிகரித்துள்ளது.

முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

அல்லு அர்ஜுனுடன் வைகுந்தபுரமுலு படத்தில் நடித்தப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

2 ஹீரோயின்கள்

2 ஹீரோயின்கள்

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தை நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டான் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் தொடங்கியது.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு

படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் தேர்தல் முடிந்ததும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். விஜய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. விஜய்யை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார்.

பீஸ்ட் படம் படப்பிடிப்பு

பீஸ்ட் படம் படப்பிடிப்பு

ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற இருந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக லாக்டவுனும் அறிவிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானது.

3 பாலிவுட் படங்கள்

3 பாலிவுட் படங்கள்

லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் முதல் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பில் பங்கேற்க பூஜா ஹெக்டே கடந்த மாதம் சென்னை விமான நிலையம் வந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து 3 பாலிவுட் படங்கள் மற்றும் 3 தெலுங்கு படத்தில் பிஸியாக உள்ளார்.

படம் தொடர்பான அப்டேட்ஸ்

படம் தொடர்பான அப்டேட்ஸ்

சமூக வலைதளங்களில் ஆக்ட்வாக உள்ள நடிகை பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். தனது படம் தொடர்பான அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறார் பூஜா ஹெக்டே. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடிகை பூஜா ஹெக்டேவின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 10 மில்லியனாக உயர்ந்தது.

பூஜா ஹெக்டே செலிபிரேஷன்

பூஜா ஹெக்டே செலிபிரேஷன்

இந்நிலையில் நேற்று அவரது இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 15 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனால் செம ஹேப்பியாகி உள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. தனது இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கொண்டாடியுள்ள பூஜா ஹெக்டே அதனை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

என்னுடை டீம் இவர்கள் தான்

என்னுடை டீம் இவர்கள் தான்

மேலும் அந்த வீடியோவுக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனைத் தொட்ட இந்த நேரத்தில் என்னுடைய டீம்மையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்தேன். அவர்கள் என்னை கவனித்துக்கொள்கிறார்கள், என்னை சிரிக்க வைக்கிறார்கள், என் நோய்வாய்ப்பட்ட நாட்களில் கூட என்னை பிரமிக்க வைத்தார்கள். வீட்டு உணவை அளித்தார்கள். இதற்கு நிறைய நன்றி, உங்களால் ஒரே நேரத்தில் 4 படங்களை நடிப்பது எளிது. இதுதான் பூஜா ஹெக்டே டீம்.. என் ரசிகர்களுக்கு, உங்களை மிகவும் நேசிக்கிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ
லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ

லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ

பூஜா ஹெக்டே ஷேர் செய்துள்ள வீடியோவில் தனது ஹேர் ஸ்டைலிஸ்ட்டை அறிமுகப்படுத்தியுள்ள பூஜா ஹெக்டே, அவருக்கு ஹேர் ஸ்டைல் செய்து விடுகிறார். தனது மேக்கப் அஸிஸ்டன்ட் தன்னுடன் பெட்டில் குதித்து விளையாடி தன் மேல் படுப்பது, தனது குக் தனக்கு கொண்டு வரும் ஸ்னாக்ஸை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தனக்கு வெறும் பிளேட்டை நீட்டுவது, தன்னுடைய உதவியாளர் மொபைல் பார்த்துக்கொண்டே குடையை தனக்கு பிடித்து செல்வது, தனது காஸ்ட்யூம் அசிஸ்ட்டன்ட் என அனைவருடனும் க்யூட்டான வீடியோவை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருவதோடு வைரலாகவும் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X