அப்படியே 4 நிமிஷம் நின்னுட்டேன்.. விஜய்யுடன் பீஸ்ட் சாங்.. அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

சென்னை: பீஸ்ட் படம் குறித்து அப்படத்தின் ஹீரோயினான நடிகை பூஜா ஹெக்டே சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

அல்லு அர்ஜுனுடன் வைகுந்தபுரமுலு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

வைகுந்தபுரமுலு படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டேவுக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சென்னையில் 2வது ஷெட்யூல்

சென்னையில் 2வது ஷெட்யூல்

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது ஷெட்யூல் அண்மையில் சென்னையில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பின் போது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும் விஜய்யும் கூட படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்டனர்.

ஷூட்டிங் நன்றாக செல்கிறது

ஷூட்டிங் நன்றாக செல்கிறது

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "எனக்கு தெரிந்தவரையில் ஷூட்டிங் மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அடுத்த ஷெட்யூலுக்காக சென்னை வருவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

எந்த அளவுக்கு பேசலாம்

எந்த அளவுக்கு பேசலாம்

இதற்கு மேல் நான் எந்த அளவுக்கு அதை பற்றி பேசலாம் என்று தெரியவில்லை. இதை நீங்கள் கேட்பதற்கு சரியானவர்கள் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் சன் பிக்சர்ஸ்தான், அவர்களுக்குத்தான் போஸ்டர், படத்தின் ப்ரோமோஷன் போன்றவைகளை எப்படி செய்யவேண்டும் என்ற ஐடியா இருக்கும்." என்றார்.

மறந்து அப்படியே நின்றுவிடுவேன்

மறந்து அப்படியே நின்றுவிடுவேன்

பின் ரசிகர்கள் தளபதியோடு நடனம் ஆடினீர்களா என்று கேட்ட போது, அதில் சர்ப்ரைஸ் உள்ளதாகவும் கூறிய அவர் "பள்ளி கல்லூரிகளில் ஸ்டேஜில் நடனமாடும்போதே ஸ்டெப்களை மறந்து அப்படியே நின்றுவிடுவேன். நான்கு நிமிடங்கள் பாடல் முடியும் வரை அப்படியே நின்றிருக்கிறேன். ஆனால் அது போன்ற தோல்விகள்தான் என்னை மேலும் மேலும் முயற்சி செய்ய தூண்டியது" இவ்வாறு பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

15 மில்லியன் ரசிகர்கள்

15 மில்லியன் ரசிகர்கள்

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ளார் பூஜா ஹெக்டே. இதனால் சமூக வலைதளங்களில் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இன்ஸ்டாவில் பூஜா ஹெக்டேவை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் தான் 15 மில்லியனை தாண்டியது.

3 பாலிவுட் படங்கள்

3 பாலிவுட் படங்கள்

இதனை முன்னிட்டு தனது ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப் அஸிஸ்டன்ட், தனது குக், தன்னுடைய உதவியாளர், தனது காஸ்ட்யூம் அசிஸ்ட்டன்ட் என அனைவருடனும் க்யூட்டான வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து 3 பாலிவுட் படங்கள் மற்றும் 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X