Pooja Hegde :என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஒர்க் அவுட் ஆகாது.. பூஜா ஹெக்டேவை கிண்டலடிக்கும் பேன்ஸ்!

சென்னை : என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஒர்க் அவுட் ஆகாது என்று நடிகை பூஜா ஹெக்டேவை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து அனைத்து மொழி ஆடியன்சுக்கும் தெரிந்த முகமாக இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.

சால்மான் கானுக்கு ஜோடியாக இவர் நடித்த கிசி கா பாய் கிசி கி ஜான் உலகம் முழுவதும் வரும் 21ந் தேதி வெளியாக உள்ளது.

Actress Pooja Hegde Gorgeous Stunning Photoshoot

பூஜா ஹெக் : விஜய், அல்லு அர்ஜூன், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பூஜா ஹெக்டே முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். ஓரளவு வரவேற்பை பெற்ற இப்படத்தில் ஜீவா ஜோடியாக சக்தி என்ற கேரக்டரில் நடித்து அதிகம் கவனம் ஈர்த்தார் பூஜா ஹெக்டே.

சூப்பர் பாடல் : முகமூடி படத்திற்கு பின் தமிழில் படவாய்ப்பு இல்லாததால், டோலிவுட்டுக்கு சென்றார். இவர் தெலுங்கில் அறிமுகமான முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்தார். பூஜா ஹெக்டே கடைசியாக அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆலா வைகுந்தபுரம்லு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற புட்டபொம்மா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

Actress Pooja Hegde Gorgeous Stunning Photoshoot

தோல்வி அடைந்தன : இந்த படத்தின் வெற்றியால் புகழின் உச்சிக்கே சென்ற பூஜா ஹெக்டே தமிழில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவித்து எதிர்பார்த்த வெற்றியை தராமல் போனதால் தமிழில் படவாய்ப்பை இழந்தார். பீஸ்ட் படத்திற்கு பின் வெளியான ராதே ஷ்யாம், ஆச்சர்யா ஆகிய படங்களும் படுதோல்வியடைந்தன.

தனியாக இருப்பது மகிழ்ச்சி : தற்போது இவர் சல்மான் கானுக்கு ஜோடியாக கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்துள்ளார். முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் சல்மான் கானுடன் கடந்த சில நாட்களாக சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் திரையுலகில் பேச்சு நிலவுகிறது. இந்த வதந்தியை மறுத்துள்ள பூஜா, நான் இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன். தனியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பூஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Actress Pooja Hegde Gorgeous Stunning Photoshoot

கிண்டலடிக்கும் பேன்ஸ் : தமிழ்,தெலுங்கு என அடுத்தடுத்த படங்களின் தோல்வியால் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே தெலுங்கில் ஒரே ஒரு படத்தை மட்டுமே கைவசம் வைத்து இருக்கிறார். கிசி கா பாய் கிசி கி ஜான் படம் வெற்றி பெற்றால் மட்டுமே படவாய்ப்பு வரும் என்பதால் பூஜா ஹெக்டே பதற்றத்தில் இருக்கிறார். மேலும், படவாய்ப்பை பெற கிளாமராக போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பேன்ஸ், என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஒர்க் அவுட் ஆகாது என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X