தீயாய் ஒர்க் அவுட் செய்யும் விஜய் பட நடிகை.. இந்த படம் வந்து 2 வருஷம் ஆயிடுச்சா?

சென்னை : நடிகை பூஜா ஹெக்டே தீயாய் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவுகின்றது.

முகமூடி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு ஹிந்தி என்று பல மொழிகளில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

தமிழில் இவர் அறிமுகமானாலும் இவர் தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

2 வருடம் கடந்து

2 வருடம் கடந்து

நடிகர் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்த அலா வைகுந்தபுரம்லோ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகி பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

இன்றுடன் இந்த படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் பல ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

அலா வைகுந்தபுரம்லோ படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகரான விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம்

அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் தெலுங்கில் ஆச்சார்யா என்ற படமும் ஹிந்தியில் சர்க்கஸ் என்ற படத்திலும் தற்போது தன் கைவசம் வைத்துள்ளார்.

ஒர்க் அவுட்

ஒர்க் அவுட்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் பூஜா ஹெக்டே, அதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே ஸ்லிம்மாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே. தனது உடல் எடையை கூடாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். எப்பொழுதும் தனது சமூகவலைதளத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் யோகா செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் இவர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது..

Recommended Video

Prabhu Deva வுக்காக நான் எடுத்த சபதம் | Actress Samyuktha Hegde |Thael Audio Launch |Filmibeat Tamil
பிகினி நாயகி

பிகினி நாயகி

தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, கிளாமர் புகைப்படங்களையும் பிகினி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X