எழுந்திருக்கும் போதே சூப்பர் நியூஸ்... ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பீஸ்ட் நாயகி

சென்னை : நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் விளங்குகிறார். தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானாலும் இவரை தெலுங்கு படவுலகமே அள்ளி அணைத்துக் கொண்டது.

தமிழ், தெலுங்கில் பிசி

தமிழ், தெலுங்கில் பிசி

தொடர்ந்து தெலுங்குப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பூஜா. சமீபத்தில் அகிலுடன் இவர் நடித்து வெளியான மோஸ்ட் எலிஜிபள் பேச்சிலர் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து பூஜாவின் மார்க்கெட் தெலுங்குப் படவுலகில் எகிறியுள்ளது.

விஜய்யுடன் ஜோடி

விஜய்யுடன் ஜோடி

இதேபோல தமிழிலும் நடிகர் விஜய்யுடன் இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் 80 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்திவரும் பூஜா, சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். அவ்வப்போது புதிய போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

மாலத்தீவில் சுற்றுலா

மாலத்தீவில் சுற்றுலா

சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்றிருந்த பூஜா, தன்னுடைய பிகினி உள்ளிட்ட உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவரை பாலோ செய்யும் ரசிகர்கள் அதிகமாகி உள்ளனர். தொடர்ந்து பல்வேறு பதிவுகளை அவர் பதிவிட்டு வருவதே இதற்கு காரணம்.

இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பாலோயர்கள்

இன்ஸ்டாகிராமில் 16 மில்லியன் பாலோயர்கள்

இன்னிலையில் இன்ஸ்டாகிராமில் அவரை பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை 16 மில்லியனை தாண்டியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பூஜா. தான் படுக்கையிலிருந்து எழுந்திருக்கும்போதே இத்தகைய சிறப்பான செய்தியை கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Prabhu Deva வுக்காக நான் எடுத்த சபதம் | Actress Samyuktha Hegde |Thael Audio Launch |Filmibeat Tamil
ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

மேலும் ரசிகர்களின் அன்பிற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார். ஒரு குழந்தையின் குதூகலத்திற்கு தான் சென்றுள்ளதை அந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தான் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X