நடுக்கடலில் விடுமுறைக் கொண்டாட்டம்... ஜிலீர் புகைப்படம் வெளியிட்ட பூஜா ஹெக்டே!
ஐதராபாத் :நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
Recommended Video
சமீபத்தில் தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான மோஸ்ட் எலிஜிபள் பேச்சிலர் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்துவரும் இவர், கிடைத்த கேப்பில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அகிலுடன் இவரது நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான மோஸ்ட் எலிஜிபள் பேச்சுலர் படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை நாகர்ஜூனா தனது குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

விஜய்க்கு ஜோடி
தொடர்ந்து பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. தமிழில் நடிகர் விஜய்யுடன் இவர் நடித்துவரும் பீஸ்ட் படமும் 80 சதவிகித சூட்டிங்கை நிறைவு செய்துள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீசுக்கு காத்திருக்கும் பூஜா
தமிழில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக இந்தப் படத்தின்மூலம் பூஜா நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் இவர் நடிக்கும் காட்சிகள் பெரும்பாலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்காக பூஜா ஆவலுடன் காத்திருக்கிறார். இதன்பிறகு தமிழில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.

அழகின் ரகசியம்
சமீபத்தில் தன்னுடைய அழகின் ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார் பூஜா. தான் அதிகமான நேரத்தை ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதில் செலவிடுவதாகவும், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஜிம்மில் பைலேட்ஸ் பயிற்சியையும் அதேபோல யோகாவையும் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பிசி
சமூக வலைதளங்களில் மிகவும் பிசியாக காணப்படுகிறார் பூஜா ஹெக்டே. அவ்வப்போது பல போட்டோஷுட்களை நடத்தி புகைப்படங்களை அதிகமாக வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். மேலும் தன்னுடைய படங்களின் அப்டேட்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

விடுமுறைக் கொண்டாட்டம்
இந்நிலையில் தற்போது தன்னுடைய விடுமுறைக் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடுக்கடலில் படகில் செல்வது போன்ற அந்தப் புகைப்படத்தில் அவரது அழகு அள்ளுகிறது. மார்டன் உடையில் தலைமுடி அலைமோத சிறப்பாக அந்தப் புகைப்படத்தில் காட்சியளிக்கிறார்.


Click it and Unblock the Notifications











