தமிழில் மீண்டும் களமிறங்கும் பீஸ்ட் நாயகி.. இந்த முறை யார்கூட தெரியுமா?
சென்னை : நடிகர் ஜீவாவுடன் முகமுடி படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை பூஜா.
தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நாயகியாக நடித்துவந்த பூஜா ஹெக்டே, பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

நடிகை பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி என்ற படத்தில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு கைக்கொடுக்காத நிலையில், தமிழில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இன்றி, தெலுங்கில் நடிக்கத் துவங்கினார் பூஜா ஹெக்டே.

விஜய்யுடன் இணைந்த பூஜா ஹெக்டே
தொடர்ந்து தெலுங்கில் ஹிட் படங்களில் நடித்த பூஜா, முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் விஜய் படத்தின்மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார்.

கலவையான விமர்சனங்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. படத்தில் விஜய்க்கு இணையாக நடனத்திலும் கலக்கலான பர்பார்மென்சை பூஜா கொடுத்திருந்தார். படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்ததாக ரசிகர்கள் கூறியிருந்தனர். ஆனாலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது.

சம்பளத்தை குறைத்த பூஜா
பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிகமாக பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே. இதனால் இவரது சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆர்யாவுடன் இணைந்த பூஜா ஹெக்டே?
இந்நிலையில், தமிழில் மீண்டும் புதிய படமொன்றில் பூஜா கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிங்குசாமி இயக்கத்தில் பையா 2 படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் அறிவிப்பு
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பையா 2 படத்தில் ஆர்யாவுடன் பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவி -போனிகபூரின் மகளுமான ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை போனி கபூர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











