Pooja hegde: காதல் மட்டும் தான் எல்லாத்துக்கும் தேவை.. நின்று கொண்டே கனவு காணும் விஜய் பட நாயகி!
சென்னை: நடிகை பூஜா ஹெக்டே தமிழ். தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்த பூஜா ஹெக்டே, முன்னதாக ஜீவாவுடன் இணைந்து முகமூடி படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார்.
விஜய்யின் பீஸ்ட் படம் பூஜா ஹெக்டேவிற்கு சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய்யுடனேயே மீண்டும் ஜனநாயகன்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே: விஜய்யுடன் முன்னதாக பீஸ்ட் படத்தில் இணைந்து நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் தொடர்ந்து விஜய்யின் ஜனநாயகன்படத்திலும் அவர் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார். முன்னதாக பீஸ்ட் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ரொமான்ஸிலும் டான்சிலும் அதிரடி கிளப்பிய நிலையில் தற்போது உருவாகி வரும் ஜனநாயகன்படத்தில் இந்த ஜோடி எத்தகைய காம்பினேஷனை கொடுக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜனநாயகன்படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அல்லது கோடை கொண்டாட்டமாக ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் விறுவிறு ஷூட்டிங்கில் அடுத்தடுத்து கலந்து வருகிறார் பூஜா ஹெக்டே.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இந்நிலையில் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் இவரை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் பூஜா ஹெக்டே, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த பதிவுகளையும் பகிர்வுகளையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் கருப்பு நிற உடையில் மிகவும் க்யூட்டான எக்ஸ்பிரஷனுடன் போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களையும் பெற்று வருகின்றன.
காதல் மட்டுமே ஆதாரம்: அனைத்திற்கும் காதல் மட்டுமே ஆதாரம் என்பதாக கேப்ஷனில் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்ப தன்னுடைய போஸ்களிலும் ரொமான்ஸ் கலந்து ரசிகர்களை வதை செய்துள்ளார். முன்னழகும் பின்னழகும் சிறப்பாக வெளிப்படும் வகையில் இவரது கெட் அப் காணப்படுகிறது. இதனிடையே படிக்கட்டுகளில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில் நின்று கொண்டே கனவு காணுவதாக பூஜா ஹெக்டே காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ஏராளமான லைக்ஸ்களையுய்ம பெற்று வருகின்றன.

காந்தக் கண்ணழகி: காந்தக் கண்ணழகி என்று ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். அடுத்ததாக ஜனநாயகன் படம் மூலம் ரசிகர்களை கவர தயாராகியுள்ள பூஜா ஹெக்டே சூர்யாவுடனும் ரெட்ரோ படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், பீஸ்ட் மூலம் கிடைத்த ரசிகர்களின் எண்ணிக்கையை மேலும் பூஜா ஹெக்டே அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











