மஞ்சள் மலராக ஜொலிக்கும் பீஸ்ட் பட நடிகை... வைரலாகும் புகைப்படங்கள்!

சென்னை : நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சமூக வலைதளங்களில் பரபரப்புடன் செயல்பட்டுவரும் பூஜா ஹெக்டே ட்விட்டர் பக்கத்தில் புதிய படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே முகமுடி படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படவுலகில் அறிமுகமானார். அங்கு சிறப்பான பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளார்.

பீஸ்ட் படத்தில் பூஜா

பீஸ்ட் படத்தில் பூஜா

இந்நிலையில் தற்போது விஜய்யுடன் ஜோடி சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்சனின் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் குறித்த ஸ்மார்ட் பதில்

விஜய் குறித்த ஸ்மார்ட் பதில்

இதனிடையே விஜய் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்து பேசிய பூஜா ஹெக்டே அளித்த பதிலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் குறித்து ஒரே வார்த்தையில் பதிலளிக்கக் கோரிய ரசிகருக்கு ஸ்வீட்டஸ்ட் என்று பதிலளித்திருந்தார் பூஜா ஹெக்டே.

மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படம்

மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படம்

இதனிடையே தெலுங்கில் அகிலுடன் இணைந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இரண்டு தினங்களில் 18 கோடிக்கும் மேற்பட்ட லாபத்தை இந்த படம் பெற்றுள்ளதாக பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

இதனிடையே சமூக வலைதளத்திலும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து பல்வேறு போட்டோஷுட்களையும் எடுத்து விதவிதமான புகைப்படங்களை அவர் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

கலக்கல் புகைப்படங்கள்

கலக்கல் புகைப்படங்கள்

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடையில் கலக்கலான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். உடைக்கு ஏற்றபடி அவர் அணிந்துள்ள ஸ்லிப்பர் மற்றும் ஹேர்ஸ்டைலும் கலக்கல் ரகம். ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X