Pooja Hegde: Black and white-ல் கலக்கல் போஸ்.. அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் பூஜா ஹெக்டே!

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர். கடந்த 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் 2வது இடத்தை பிடித்துள்ள இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமுடி படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்குப் படங்களில் அதிக கவனம் செலுத்தி பல ஹிட் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இதையடுத்து பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்து தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஆச்சார்யா, எஃப் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டிலும் சர்க்கஸ் என்ற படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே சல்மான்கான் ஜோடியாக கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் கடந்த 2014ம் ஆண்டில் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் என்ற படத்தின் ரீமேக்காக வெளியானது. படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக அடுத்தடுத்த பதிவுகளை செய்து வருகிறார்.

Actress Pooja hegdes new photoshoot pictures in black & White

நடிகை பூஜா ஹெக்டே: நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2010ம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் அழகு போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர். தமிழில் மிஷ்கின் -ஜீவா காம்பினேஷனில் உருவான முகமூடி படம் மூலம் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து தெலுங்குப்படங்களில் நடித்து மிகப்பெரிய நாயகியாக ஏராளமான ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த இவரை மீண்டும் தமிழ் திரையுலகம் விஜய்க்கு ஜோடியாக்கி அழகு பார்த்தது. பீஸ்ட் படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் விஜய்க்கு சமமாக பாடல் காட்சிகளில் இவர் போட்ட ஆட்டம் ஏராளமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கில் ஆச்சார்யா மற்றும் எஃப் 3 படங்களில் நடித்த பூஜா ஹெக்டே இந்தியில் சல்மான்கான் ஜோடியாக கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் சரியாக போகவில்லை. ஆயினும் தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி வருகிறார் பூஜா ஹெக்டே. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக பல போட்டோஷுட்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

Actress Pooja hegdes new photoshoot pictures in black & White

புதிய போட்டோஷுட்: அந்த வகையில் தற்போது கருப்பு வெள்ளையில் மிகச்சிறப்பான உடையுடன் புதிய போட்டோஷுட்டை எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் தன்னுடைய தொடையழகை வெளிக்காட்டும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். மேலும் கண்களால் காந்தமாக ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு 24 மணிநேரத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளன. தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டுவரும் பூஜா ஹெக்டேவை 26 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

5 லட்சத்திற்கு பூஜா அணிந்த லெஹெங்கா: திருமண சீசனையொட்டி முன்னதாக பூஜா ஹெக்டே சிவப்பு நிற லெஹெங்காவை வைத்து போட்டோஷுட் எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். பிரபல டிசைனர் அர்பிதா மேதா கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த உடை எராளமானோரை கவரும் வகையில் அமைந்திருந்தது. ஆனால் விலையை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த உடையின் விலை 5.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போட்டோஷுட் புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X