பூஜா ஹெக்டேவை கவலைப்பட வைத்த விஜய்.. என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் இறுதிப்படமான ஜன நாயகன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளார். படத்தை ஹெச் வினோத் இயக்கிவரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அல்லது கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விஜய்யின் அரசியல் பயணத்தில் முக்கியமான இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் அடுத்த ஆண்டு தேர்தலையொட்டி ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் இரண்டாவது முறையாக இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.

vijay jana nayagan pooja hegde


ஜன நாயகன் படம்: நடிகர் விஜய்யின் 69வது மற்றும் கடைசி படமாக உருவாகி வருகிறது ஜன நாயகன்படம். இந்த படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கி வரும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷெட்யூல்கள் சிறப்பாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. முன்னதாக இந்த ஜோடி பீஸ்ட் படத்திலேயே இணைந்திருந்த நிலையில் படத்தில் அவர்களுக்கு அதிகமான காம்பினேஷன் காட்சிகள் இல்லாத சூழல் காணப்பட்டது. ஆனாலும் பாடல்களில் மிகச் சிறப்பான வரவேற்பை இந்த ஜோடி பெற்றது. குறிப்பாக நடனம் என்றாலே விஜய் என்ற நிலை கோலிவுட்டில் உள்ள நிலையில் அவருக்கு சிறப்பாக ஈடு கொடுத்து பாடல்களில் டான்ஸ் ஆடியிருந்தார் பூஜா ஹெக்டே.

சோகப்படுத்திய விஜய்: தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் இணைந்து நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் அடுத்தடுத்து ஜனநாயகன். மற்றும் சூர்யாவுடன் ரெட்ரோ படங்களில் நடித்துள்ளார். ரெட்ரோ படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் ஜன நாயகன்படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, விஜய்யின் அரசியல் பயணம் ஒரு ரசிகையாக தன்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். அவரை திரையில் அதிகமாக பார்க்க தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

விஜய்க்கு சப்போர்ட்: ஆனால் அவரது அரசியல் என்ட்ரிக்கு தான் சப்போர்ட் செய்வதாகவும் அவருக்கு அதிகமான வலிமை கிடைக்க தான் வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழில் மோஸ்ட் வான்டட் நடிகையாக மாறியுள்ள பூஜா ஹெக்டே, முன்னதாக கடந்த 2012ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா லீட் கேரக்டரில் நடித்திருந்த முகமூடி படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது தன்னுடைய சினிமா பயணத்தில் 12 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள பூஜா, இந்த பயணத்தில் தான் அதிகமான தோல்விகளையும் அதிகமான வெற்றிகளையும் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் படத்தில் பூஜா கேரக்டர்: இந்நிலையில் அடுத்தடுத்த படங்கள் தமிழில் அவருக்கு அமைந்து வருகிறது. ரெட்ரோ படத்தில் சூர்யாவுடன் ரொமாண்டிக் ஜானரில் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே, படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சூர்யாவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்துள்ளார். இதனிடையே விஜய்யுடன் பூஜா ஹெக்டே இணைந்துள்ள ஜன நாயகன்படம் அரசியல் களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் பூஜாவின் கேரக்டர் படத்தில் எப்படி அமைந்திருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X