ஜாலி டூருக்கு பிளான் பண்ண பூஜா ஹெக்டே.. ஒரு மாசம் இங்க பூஜாவை பார்க்க முடியாதா?

சென்னை : நடிகை பூஜா ஹெக்டே அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

அவரது ராதே ஷ்யாம், பீஸ்ட் மற்றும் ஆச்சார்யா படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

 நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே முகமுடி படத்திற்கு பிறகு நீண்ட காலங்கள் தாண்டி தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். எடுத்தவுடன் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பு மட்டுமில்லாமல் பாடல்களுக்கு இவர் ஆடிய நடனமும் சிறப்பாக காணப்பட்டது.

பிசியான நடிப்பு

பிசியான நடிப்பு

தெலுங்கு, இந்தி என இவர் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் இவரது ராதே ஷ்யாம், ஆச்சார்யா படங்கள் வெளியானது. இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றது. முன்னதாக பீஸ்ட் படமும் இவருக்கு சிறப்பாக அமையவில்லை. அடுத்தடுத்த படங்களின் தோல்வி பூஜாவின் கேரியரிலும் எதிரொலித்து வருகிறது.

பாலிவுட்டில் ஒப்பந்தம்

பாலிவுட்டில் ஒப்பந்தம்

ஆயினும் பாலிவுட்டில் தற்போது கமிட்டாகியுள்ளார் பூஜா ஹெக்டே. தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் சுற்றுப்பயணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக பூஜா ஹெக்டே காணப்படுகிறார். சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவில் சூப்பர் கொண்டாட்டத்தில் காணப்பட்டார்.

மாலத்தீவில் கொண்டாட்டம்

மாலத்தீவில் கொண்டாட்டம்

அங்கிருந்து பிகினியிலும் மற்ற சூப்பர் காஸ்ட்யூமிலும் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் தற்போது படங்களின் சூட்டிங் எதுவும் இல்லாத நிலையில் வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டார். இதுகுறித்து ஏர்போர்ட்டிலிருந்து அவர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

 3 கண்டங்கள்.. 4 நகரங்கள்

3 கண்டங்கள்.. 4 நகரங்கள்

இந்த சுற்றுப்பயணத்தில் 3 கண்டங்கள், 4 நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். இதில் பாங்காக்கிற்கு அவர் முதலில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பூஜா பகிர்ந்துள்ள இந்த புகைப்படம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் லைக்

ரசிகர்கள் லைக்

ஒரே நாளில் 7.2 லட்சம் ரசிகர்கள் இந்த பதிவை லைக் செய்துள்ளனர். அங்கு சென்ற பின்பு அதன் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் காத்திருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளனர். எப்போதும் கலகலப்பாக உற்சாகமாக காணப்படுபவர் பூஜா ஹெக்டே. பீஸ்ட் படத்தின் பல சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களில் இதை காண முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X