கணிசமாக சம்பளத்தை குறைத்த பீஸ்ட் பட நாயகி.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை : நடிகை பூஜா ஹெக்டே தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் பூஜா. இந்தப் படத்தின்மூலம் தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமுடி என்ற படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்திருந்தார். தொடர்ந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத நிலையில், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒக்க லைலா கோசம் என்ற தெலுங்குப்படத்தின் மூலம் இவர் தெலுங்கில் அறிமுகமானார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

முன்னதாக கடந்த 2010ம் ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து பிரபலமானவர் பூஜா ஹெக்டே. இதன்மூலமே தமிழில் முகமூடி படத்தில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கும் வாய்ப்பு பூஜாவிற்கு கிடைத்தது. தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில் மொகஞ்சதாரோ என்ற இந்திப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் பூஜாவிற்கு கிடைத்தது.

விஜய்யுடன் இணைந்த பூஜா ஹெக்டே

விஜய்யுடன் இணைந்த பூஜா ஹெக்டே

இதனிடையே தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், வசூலில் மிரட்டியது. இந்தப் படத்தை அடுத்து தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் சரியாக போகாததால் பூஜாவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அடுத்தடுத்த படங்கள் தோல்வி

அடுத்தடுத்த படங்கள் தோல்வி

அதேபோல பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், ஆச்சார்யா, எலிஜிபள் பேச்சுலர் மற்றும் சர்க்கஸ் என அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்துள்ளன. இதையடுத்து தன்னுடைய சம்பளத்தில் 1 கோடி ரூபாய் வரை பூஜா ஹெக்டே குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பளத்தை குறைத்த பூஜா

சம்பளத்தை குறைத்த பூஜா

முன்னதாக இந்தப் படங்களில் நடித்தபோது 3 முதல் மூன்றரை கோடி ரூபாய் வரை பூஜா ஹெக்டே சம்பளம் வாங்கி வந்தார். இந்நிலையில் இந்தப் படங்களின் தோல்வி, அவர் தனது சம்பளத்தை குறைக்கும்படி செய்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து தன்னுடைய படங்களின் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பூஜா ஹெக்டே திட்டமிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டேவின் நடனம்

பூஜா ஹெக்டேவின் நடனம்

பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தில் பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஈடுகொடுத்து நடனத்தில் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்தியிருந்தார். அரபிக்குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவையும் சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X