பீஸ்ட்ல தன்னோட கேரக்டர் பத்தி ரகசியத்தை போட்டுடைத்த பூஜா ஹெக்டே

சென்னை :நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ள படம் பீஸ்ட். படத்தில் அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். தீவிரவாதிகளால் கடத்தப்படும் பொதுமக்களை ரா ஏஜெண்டான விஜய் மீட்பதாக கதைக்களத்தை நெல்சன் திலீப்குமார் எடுத்துக் கொண்டுள்ளார்.

விஜய் கேரக்டர்

விஜய் கேரக்டர்

படத்தில் வீரராகவன் என்ற கேரக்டரில் விஜய் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள், ட்ரெயிலர், தீம் பாடல், ப்ரமோக்கள் என அடுத்தடுத்து ரிலீசாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், பேனர்கள் உள்ளிட்டவற்றின் மூலம் ரசிகர்களும் படத்தை கொண்டாட்டத்துடன் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

சிறப்பான பிரமோஷன்கள்

சிறப்பான பிரமோஷன்கள்

இந்நிலையில் படத்தின் பிரமோஷன்களையும் சன் பிக்சர்ஸ் சிறப்பாக மேற்கொண்டுள்ளது. படத்தின் ஆடியோ ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தாகியுள்ளது. விஜய் படங்களின் ஆடியோ ரிலீசுக்காக ரசிகர்கள் எப்போதுமே ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அவர் அரசியல் குறித்த தகவல்களை வெளியிடுவார், குட்டி ஸ்டோரி சொல்வார் என்று காத்திருப்பார்கள். ஆனால் ஆடியோ ரிலீஸ் ரத்தனாது அவர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

விஜய் பேட்டி

விஜய் பேட்டி

ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், சன் டிவியில் பேட்டியளித்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இந்தப் பேட்டியில் அரசியல் பேசினார் விஜய். தன்னுடைய அரசியல் பிரவேசம் ரசிகர்கள் கையில்தான் உள்ளது என்றார். குட்டி ஸ்டோரியும் சொன்னார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் கட்டுக்கடங்காமல் போனது.

பூஜாவின் சிறப்பான பிரமோஷன்கள்

பூஜாவின் சிறப்பான பிரமோஷன்கள்

படத்தின் பிரமோஷன்களில் பூஜா ஹெக்டேவும் சிறப்பான வகையில் பங்கேற்றுள்ளார். நேற்றைய தினம் ட்விட்டரில் ரசிகர்களுடன் பீஸ்ட் குறித்து லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார். ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தது அனைவரையும் கவர்ந்தது.

பூஜா கேரக்டர் பெயர்

பூஜா கேரக்டர் பெயர்


இந்நிலையில் படத்தில் பூஜா ஹெக்டேவின் கேரக்டர் பெயர் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அவர் அளித்த பதில் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் வீரராகவன் என்பது முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பூஜாவின் கேரக்டர் பெயர் ப்ரீத்தி என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ரசிகர்களுடன் பார்க்க விருப்பம்

மேலும் அவர் திரையரங்கில் சென்று படத்தின் முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கவுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் தமிழ் ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X